ஜீரண சக்தியை அதிகரிக்கும் மணமணக்கும் இஞ்சி குழம்பு செய்வது எப்படி?

Increase digestive power
Increase digestive power
Published on

இஞ்சி குழம்பு

தேவை:

துவரம் பருப்பு - 2 ஸ்பூன்

கடலை பருப்பு - 2 ஸ்பூன்

சாம்பார் பொடி - 2 ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 3

புளி - சிறிதளவு

பூண்டு - 20 பல்

இஞ்சி - 25 கிராம்

வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

புளி - சிறிதளவு

செய்முறை:

முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும். நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.

இஞ்சி அல்வா

தேவை:

இஞ்சி – 100 கிராம்

பனை வெல்லம் – 2 கப்

விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 10

ஏலக்காய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

கசகசா – 2 டீஸ்பூன்

முந்திரி – 10

உலர் திராட்சை – 10

இதையும் படியுங்கள்:
சமையலறையில் இந்த கலர் பெயிண்ட் அடிச்சா பூச்சிகளுக்கெல்லாம் ஷாக் அடிக்கும்!
Increase digestive power

செய்முறை:

இஞ்சியைத் தோல்சீவி அரைத்து, அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அந்தச் சாறில் பேரீச்சம்பழங்களை ஊறவிடவும். வெல்லத்தூளை வெந்நீரில் கரைத்து வடிகட்டவும். கசகசாவை லேசாக தண்ணீர் சேர்த்து மை போல அரைக்கவும்.

பின் ஊறிய பேரீச்சம்பழத்தை அந்தச் சாறோடு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதோடு, வெல்லத்தண்ணீர், கசகசா விழுது சேர்த்து, வாணலியில் நெய்விட்டுக் கிளறவும். அடுப்பை 'ஸிம்'மில் வைத்து, தொடர்ந்து கிளறி, அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கினால் சுவையான, சத்தான இஞ்சி அல்வா ரெடி.

இஞ்சி ஊறுகாய்

தேவை:

இஞ்சி – 100 கிராம் (தோல் சீவி நறுக்கிகது)

புளி – 1 எலுமிச்சை அளவு

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

வெந்தயத்தூள் – 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

நல்ல எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

கருவேப்பிலை – சிறிது

இதையும் படியுங்கள்:
எள்ளும் ஆரோக்கியமும்: துவையல் முதல் கடக் பூரி வரை - 4 வகை எள் ரெசிபிகள்!
Increase digestive power

செய்முறை:

இஞ்சி தோலை சீவிக் கழுவி, நறுக்கி அல்லது துருவி வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளிக்கவும். இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும். புளி, உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயத்தூளை சேர்த்து கிளறவும். கலவையை சிறிது தண்ணீருடன் நன்கு கிளறி, கொதிக்கவிடவும்.

கெட்டியாகும்போது இறக்கி, குளிர்ந்ததும் பாட்டிலில் சேமிக்கவும். சுவையான இஞ்சி ஊறுகாய் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com