சமையலறையில் இந்த கலர் பெயிண்ட் அடிச்சா பூச்சிகளுக்கெல்லாம் ஷாக் அடிக்கும்!

kitchen tips
kitchen tips
Published on

வீட்டின் இதயமாக இருக்கும் சமையல் அறையில் இருக்கும் பூச்சிகளை விரட்டுவது சற்று சவாலான விஷயம்தான். ஆனால் சில வண்ணங்கள் பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்களை விரட்டிவிடும் . அந்த வகையில் பூச்சி இல்லா சமையலறைக்கு ஏற்ற 10 எளிய வண்ணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

வான நீலம்

ஒரு பூச்சிக்கு திறந்த வானத்தைபோல நீலநிறம் காட்சி தருவதாலும், வேட்டையாடுபவர்கள் அவற்றை எளிதாக பார்க்க முடியும் என நினைப்பதோடு, பாதுகாப்பற்ற உணர்வை கொடுப்பதால் ஈக்களும் கொசுக்களும் வான நீல நிறத்தில் இருந்து விலகி இருக்கும் .

சேஜ் கிரீன்

மென்மையான, மந்தமான மண் சார்ந்த பச்சை நிறம் தோட்டப் பூச்சிகளை ஈர்க்கும் பிரகாசமான பூக்களை பிரதிபலிக்காது. ஆகவே இந்த மந்தமான நிழல்களை நோக்கி எறும்புகளும் வண்டுகளும், ஊர்ந்து வருவது மிகவும் குறைவு.

பிரகாசமான வெள்ளை

சுத்தமான அதிகபட்ச ஒளியை பிரதிபலிக்கும் வெண்மை நிறம், பல பூச்சிகளின் உணர் திறன் மிக்க கண்களை பாதிப்பதோடு, மறைந்துகொள்ள இருள் இல்லாததால் அவ்விடத்தை விட்டு பறந்து செல்லும் .

டவ் கிரே

பூச்சிகளுக்கு சலிப்பை ஏற்படுத்துவதோடு அவற்றை வீட்டை நோக்கி ஈர்க்கும் அரவணைப்பும், கரிம உணர்வும் குளிர்ந்த, வெளிர் சாம்பல் நிறங்களுக்கு இல்லாததால், சுத்தமான சமையல் அறைக்கு நவீன தேர்வாக டவ் கிரே இருக்கிறது.

கிரீமி வெண்ணிலா

தேனீக்களை நியான் மஞ்சள் நிறம் ஈர்த்தாலும், மென்மையான கிரீம் அல்லது வெளிர் மஞ்சள் நிறமானது பெரும்பாலான பூச்சிகளால் கண்காணிக்க முடியாத அளவுக்கு லேசாக இருப்பதால் தோட்ட பூச்சிகள் உள்ளே நுழையாத சமையலறையாக கிரீமி வெண்ணிலா வண்ணம் வைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
டயட்ல இருக்கீங்களா? புரோட்டீன் நிறைஞ்ச ஒரு சூப்பர் 'ஸ்டஃப்டு சப்பாத்தி' ரெசிபி இதோ!
kitchen tips

மென்மையான லாவெண்டர்

வண்ணப் பூச்சுக்கு வாசனை இல்லை என்றாலும், ஊதா நிறத்தை அந்துப் பூச்சிகள் தவிர்ப்பதால், மென்மையான லாவண்டர் வண்ணம் பிரபலமான இயற்கை விரட்டியாக செயல்பட்டு சமையலறைக்கு தனித்துவமான பாதுகாப்பு வழங்குகிறது .

தந்தம்

தந்தம் நிறம் வெள்ளை நிறத்தை விட சற்று அதிக வெப்பத்துடன் அறையைச் சுற்றி ஒளியை பரவ விடுவதால் சிலந்திகள் வலை சுழற்றுவதை கடினமாக்கி சமையலறையை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது .

சாண்டி பீஜ் நிறம்

பெரும்பாலான சமையலறை பூச்சிகள் 'ஈரப்பதம்' மற்றும்' அடர் அழுகலை' தேடும் நிலையில் வறண்ட மண் அல்லது மணல் நிறங்கள் சுவையான, ஈரமான எதுவும் இல்லை என்பதை குறிப்பதால் பழுப்பு நிறம் நடுநிலையாக செயல்பட்டு பூச்சிகளை விரட்டுகின்றன.

டார்க் சாக்லேட்

சுவர்களில் உள்ள சிறிய விரிசல்களை அடர் பழுப்பு நிறம் மறைக்கிறது. பூச்சிகளின் உடல் வெப்பத்தை சீராக்கும் ஒளிபரப்புகளை இருண்ட சுவர்கள் வழங்குவதில்லை . இத்தகைய காரணங்களால் டார்க் சாக்லேட் நிறம் பூச்சிகளை அண்ட விடாததால் சமையலறை சுத்தம் பராமரிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் விதவிதமான தித்திக்கும் பால்கோவா!
kitchen tips

இயற்கை ஓக்

சமையலறையில் உண்மையான மர நிறங்கள் வெளிப்புற தோற்றத்தை பிரதிபலிக்கின்றன. வீட்டு 'ஈ'க்களுக்கு இது தடையாக இருப்பதோடு, சர்க்கரை நிறங்களைப் போல கவனத்தை ஈர்க்காது என்பதால் 'ஈ'க்களுக்கு எதிரியாக உள்ளன.

மேற்கண்ட வண்ணங்கள் அனைத்தும் பூச்சிகளை புகவிடாமல் செய்து சமையலறையை பாதுகாக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com