ஜில்லுனு ஜம்முனு முலாம்பழ ஐஸ்கிரீம்!

முலாம்பழ ஐஸ்கிரீம்
முலாம்பழ ஐஸ்கிரீம்Image credit - youtube.com

-பி.ஆர். லட்சுமி

டையில் மண் குடுவையில் ஐஸ்கிரீம் வாங்கி சுவைத்தவர்கள் நிறைய பேர்! ஆனால் குடும்பத்திற்கு எத்தனை வாங்கிச் செல்வது என யோசிப்பதுண்டு. விலை அதிகமாயிற்றே என வாங்காமலேயே சென்றவர்கள் பலருண்டு. அதனால் வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்து, உண்டு சுவைக்கலாமே!

கோடைகாலம் என்பதால் முலாம்பழம் நிறைய கடைகளில் கிடைக்கிறதல்லவா! முலாம்பழத்தில் பொட்டாசியம், தாமிரம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், கால்சியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. விட்டமின் ஏ,பி,சி போன்றவை இருப்பதால் உடலுக்கு நன்மை செய்கிறது. கண்பார்வையை மேம்படுத்தும். ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். 100 கிராம் முலாம்பழத்தில் 65 சதவிகிதம் விட்டமின் சி நிறைந்திருக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திரத் தொல்லைகளை முலாம்பழம் நீக்குகிறது. மாதவிடாய் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன் இப்பழத்தைச் சாப்பிட்டால் கட்டிகள் தொந்தரவு இருக்காது. அடிக்கடி சளி தொந்தரவு இருப்பவர்கள் சிறிதளவு மட்டும் இப்பழத்தை எடுத்து உண்ணலாம்.

சரி, இப்போ முலாம்பழ ஐஸ்கிரீம் பண்ணுவோமா?

முலாம்பழம்-1 (சதை எடுத்த பகுதி இரண்டு கப்), சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை அரை கப், பால் அரை கப்,  முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பு சேர்த்து அரைத்த பவுடர் அரை கப்.

முலாம்பழத்தை நன்றாகத் தோலெடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். சதையெடுப்பதற்குக் கத்தி அல்லது ஸ்பூனைப் பயன்படுத்தி செய்யலாம். மிக்சியில் (மின்அம்மி) ஒரு சுற்று சுற்றி வைத்துக்கொள்ளவேண்டும். பாதாம், முந்திரி, பிஸ்தா கலந்தவற்றை மிக்சியில் போட்டு அரைத்து தனியாகப் பொடி செய்து வைத்துக் கொள்ளவேண்டும். (குட்டீஸ்கள் சமையல் மேடையை அடைத்தபடி நீங்கள் செய்யும் ஐஸ்கிரீமைப் பார்க்க உட்கார்ந்துவிட்டார்களா?! கவலையே வேண்டாம்… சமையல் மேடையில் இடம் இல்லையென்றால் ஹாலுக்குச் சென்று டிவி பார்த்துக்கொண்டே செய்யலாமே! அந்த அளவுக்கு இது ரொம்ப எளிமையான ஐஸ்கிரீம்தான்.)

முலாம்பழம்
முலாம்பழம்

பாலை நீர் விடாமல் காய்ச்சி 100 மிலி அளவு எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரையை ஆறியவுடன் பாலில் கலந்து கொள்ளவேண்டும். முலாம்பழத்தையும், பாலையும் நன்றாக மிக்சியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவேண்டும். நன்றாக நுரை வந்திருக்கும்.

கடைசியாக அரைத்து வைத்திருக்கும் முந்திரி பவுடரை அதில் கலந்து மிக்சியில் மறுபடி அரைக்கவேண்டும். அப்படியே கொட்டியும் சாப்பிடலாம். ஆனால், வயதானவர்களும் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டுமல்லவா!

இதையும் படியுங்கள்:
குன்றாமல் - குறையாமல் அள்ளித் தரும் அட்சய திருதியை!
முலாம்பழ ஐஸ்கிரீம்

அரைத்த கலவையை நன்றாக ஒரு தட்டையான கிண்ணத்தில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்கலாம். இரண்டு மணி நேரத்தில் சுவையான முலாம்பழ ஐஸ்கிரீம் தயாராகி இருக்கும். எனக்கு பட்டர்பிஸ்கட் போட்டால்தான் பிடிக்கும் என்றால் அதையும் பொடி செய்து போட்டுக்கொள்ளலாம். இந்த ஐஸ்கிரீமில் கார்ன்ஃப்ளார், ஐஸ்கிரீம் பவுடர் என எதையும் சேர்க்காமல் செய்தாலும் மென்மையாக இருக்கும். இறுதியில் சின்ன மண்குடுவைகளில் நமது குடும்ப உறுப்பினர்களுக்குப் பரிமாறலாம். இந்த வாரம் செய்து பார்த்துவிட்டு உங்க கமெண்டைக் கொஞ்சம் ஷேர் பண்றீங்களா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com