கர்நாடகா ஸ்பெஷல் ‘ஜோவர் ரொட்டி’ செய்யலாம் வாங்க! 

Jowar Roti
Jowar Roti
Published on

ஜோவர் ரொட்டி என்பது கர்நாடகாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும். சோளமாவிலிருந்து தயாரிக்கப்படும் இந்த ரொட்டி சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஜீரணப் பிரச்சனைகள், நீரிழிவு நோய், இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும்.‌ இந்தப் பதிவில் கர்நாடகா ஸ்பெஷல் ஜோவர் ரொட்டி வீட்டிலேயே எப்படி எளிதாக செய்வது என்பதைப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • ஜோவர் (சோளம்) மாவு - 2 கப்

  • தண்ணீர் - தேவையான அளவு 

  • உப்பு - தேவையான அளவு 

  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 

ஜோவர் ரொட்டி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஒன்றரை கப் ஜோவர் மாவு சேர்த்து கிளறவும். 

பின்னர் தீயை குறைத்து மேலும் தண்ணீர் மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு கலக்கவும். இந்த சோள மாவு தண்ணீரை நன்றாக உறிஞ்சியவுடன் அடுப்பை அணைத்து மாவை 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். 

இப்போது மற்றொரு பாத்திரத்தில் ஜோவர் மாவை போட்டு நன்றாகக் கலக்கி கைகளால் பிசையவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து, ஓரளவுக்கு கனமான சப்பாத்தி போல தட்டவும். தட்டிய ரொட்டியின் மேல் நெய் தடவி, தோசை கல்லில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுத்தால் சுவையான ஜோவர் ரொட்டி தயார். 

இதையும் படியுங்கள்:
இலை அடை மற்றும் இட்லி மாவு கொழுக்கட்டை செய்யலாம் வாங்க!
Jowar Roti

குறிப்புகள்: 

உங்கள் வீட்டில் சோள மாவு இல்லை என்றால் அதற்கு பதிலாக ராகி மாவு பயன்படுத்தியும் செய்யலாம். ஜோவர் ரொட்டியுடன் சட்னி, சாம்பார் போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுகையாக இருக்கும். இந்த ரொட்டியை 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிட காற்றுபுகாத டப்பாவில் சேமித்து வைப்பது நல்லது. 

வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய இந்த ஜோவர் ரொட்டியை உங்களது தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே, இதை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com