

Cashew (காஜு) - கேப்சிகம் கிரேவி ரெசிபி:
தேவையான பொருட்கள்:
1.பச்சை நிற குடைமிளகாய் 2
2.முழு முந்திரி பருப்பு 15
3.ஏலக்காய் 2
4.லவங்கம் 3
5.பட்டை சிறு துண்டு 1
6.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1½ ஸ்பூன்
7.தக்காளி 3 (பொடிசா நறுக்கிக் கொள்ளவும்)
8.வெங்காயம் 2 (பொடிசா நறுக்கிக் கொள்ளவும்)
9.சீரகம் ¾ டீஸ்பூன்
10.பச்சை மிளகாய் 2 (இரண்டு துண்டாய் கீறியது)
11.உப்பு தேவையான அளவு
12.எண்ணெய் 2½ டேபிள் ஸ்பூன்
13.மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
14.தனியா தூள் 3 டீஸ்பூன்
15.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
16.ஃபிரஷ் கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
முந்திரிப் பருப்பை தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் மசிய அரைத்துக்கொள்ளவும். குடை மிளகாயை கழுவி, நீள வாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் 1¾ டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பின் தக்காளியை சேர்த்து வெந்து வரும் வரை நன்கு கிளறிவிடவும். பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட்டை சேர்த்து கலந்துவிடவும். பிறகு உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, சிறு தீயில் அனைத்தும் ஒன்று சேரும்படி கிளறிவிடவும். கிரேவி பதம் வருவதற்கு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஸ்பைஸஸின் பச்சை வாசனை நீங்கியவுடன் கடாயை அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றவும். சூடானதும் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து, பின் நறுக்கிய குடை மிளகாய் துண்டுகளைப் போடவும். சிறு தீயில் வைத்து, குடை மிளகாய் அரை வேக்காடு வெந்ததும் மொத்தத்தையும் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள கிரேவியில் கொட்டவும். மீண்டும் அந்த கடாயை அடுப்பிலேற்றி
கொதி வந்ததும் இறக்கிவிடவும். குடை மிளகாய் குழைந்து விடாமல் கிரஞ்சியாக இருப்பது அவசியம். பின் கொத்தமல்லி இலைகளை தூவி, சூடாக சப்பாத்தியுடன் சேர்த்து உண்ணவும்.
வெள்ளரிக்காய் இட்லி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.வெள்ளரிக்காய் 2
2.இட்லி ரவை 1 கப்
3. கெட்டித் தயிர் ½ கப்
4.பொடிசா நறுக்கிய இஞ்சி துண்டு 1 டீஸ்பூன்
5.தேங்காய் துருவல் 1 கப்
6.பச்சை மிளகாய் 2
7.நறுக்கிய மல்லி இலைகள் 4 டீஸ்பூன்
8.உப்பு தேவையான அளவு
செய்முறை:
தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு பல்ஸ் மோடில் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். வெள்ளரிக்காயை துருவி ஒரு வாயகன்ற கோப்பையில் போடவும். அதனுடன் தேங்காய் துருவல் பச்சை மிளகாய் கலவை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வந்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் நெய் தடவிய இட்லி தட்டில் இட்லிகளை ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இந்த வெள்ளரி இட்லியை தக்காளி சட்னியுடன் சேர்த்து உண்ணலாம்.