கம – கம ‘கட்டா – மிட்டா டேஸ்ட்டி சட்னி’!

கட்டா – மிட்டா  சட்னி...
கட்டா – மிட்டா சட்னி...www.youtube.com

தேவை: பேரீச்சம் பழம் – 8 (கொட்டை நீக்கியது), நல்ல கொப்பரைத் தேங்காய்த் துருவல் – 1½ கப், தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை – 250 கிராம், வறுத்த எள் – 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயப் பொடி- ½ டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், வெல்லம் (பொடி செய்தது) – 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் – 10 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்), ரீஃபன்டு ஆயில் – தேவையானது,  ஃப்ரெஷ் கொத்தமல்லி – ½ கப் (நறுக்கியது), உப்பு, தண்ணீர் – தேவையானது.

செய்முறை:

கொப்பரைத் தேங்காய்த் துருவல், வறுத்த வேர்க்கடலை, எள் ஆகியவைகளை மிக்ஸியில் இட்டு பொடித்துக் கொள்ளவும். பேரீச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகைப் போட்டு வெடிக்கவிட்டு பெருங்காயப் பொடியைச் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் விடவும். 2 -3 நிமிடங்கள் கொதித்த பிறகு, பொடித்து வைத்துள்ள பொடிக்கலவையையும், வெல்லப் பொடியையும் போட்டு 15- 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க வேண்டிய 5 மரங்கள்!
கட்டா – மிட்டா  சட்னி...

சூடான நீரில் புளியைப் போட்டு கெட்டியாக கரைத்து ஒரு கப் எடுத்து கொதிக்கிற கலவையில் சேர்க்கவும். மிளகாய்ப்பொடி, பச்சை மிளகாய், தேவையான உப்பு, மஞ்சள் பொடி, கொத்தமல்லி, நறுக்கிய பேரீச்சம் பழம் எல்லாவற்றையும் போட்டு, எல்லாம் சேர்ந்து சற்று கெட்டியானதும் இறக்கவும்.

நன்கு ஆறியபின் பாட்டிலில் எடுத்துவைக்கவும். இட்லி, தோசை, சப்பாத்தி, அடை போன்றவைகளுக்குத் தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும். உரப்பு, புளிப்பு, இனிப்பு, காரமென பலவித சுவைகளுடன் சூப்பராக இருக்கும். சாதத்தில்கூட கலந்து சாப்பிடலாம். கம-கமவென மணக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com