Kambu Laddu Recipe: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கம்பு லட்டு செய்முறை! 

Kambu Laddu
Kambu Laddu Recipe

ஆங்கிலத்தில் Pearl Millet என அழைக்கப்படும் கம்பு, பலநூறு ஆண்டுகளாக இந்திய மக்களால் உணவுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் சத்து மிகுந்த தானியமாகும். இதுவரை கம்பு பயன்படுத்தி நீங்கள் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் கம்பை பயன்படுத்தி சத்தான லட்டு செய்து சாப்பிட்டதுண்டா? வாருங்கள் இந்த பதிவில் கம்பு லட்டு எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

கம்புவின் ஆரோக்கிய நன்மைகள்: 

நாம் கம்பு லட்டு செய்வதற்கு முன் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். கம்பு ஒரு ஊட்டச்சத்து நிறைந்த தானியமாகும். இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இது குளூட்டன் ஃப்ரீ உணவு என்பதால், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே உணவுக் கட்டுப்பாடை கடைபிடிப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது. மேலும் கம்பு சாப்பிடுவதால் செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும். 

கம்பு லட்டு செய்ய தேவையான பொருட்கள்: 

  • 1 கப் கம்பு மாவு 

  • ½ கப் வெல்லம்

  • ¼ கப் துருவிய தேங்காய் 

  • 2 ஸ்பூன் நெய் 

  • சிறிதளவு ஏலக்காய் தூள் 

  • ஒரு கைப்பிடி நட்ஸ்

கம்பு லட்டு செய்முறை: 

முதலில் கம்பு மாவை ஒரு வாணலியில் கொட்டி மிதமான சூட்டில் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் அதை வேறு தட்டுக்கு மாற்றி ஆறவிடவும். 

அதே கடாயில் நெய்யை ஊற்றி தேங்காய் துருவலை போட்டு பொன்னிறமாகும் வரை லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். 

மிக்ஸியில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில், கம்பு மாவு, பொடித்த வெல்லம், தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் நெக்ஸ் போன்ற அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். 

இதையும் படியுங்கள்:
நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு! 
Kambu Laddu

அந்த கலவையில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்க்கவும். இப்போது அந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டு வடிவத்திற்கு நன்கு அழுத்தி பிடிக்கவும். நீங்கள் விருப்பப்பட்டால் உள்ளங்கையில் வைத்து அழுத்தி தட்டையாகக் கூட பிடித்துக் கொள்ளலாம். 

லட்டுக்களைத் தயார் செய்ததும் அவற்றை சிறிது நேரம் குளிர்விக்க வேண்டும். குறைந்தது அரை மணி நேரமாவது லட்டை ஆறவிடவும். அப்போதுதான் நல்ல பதத்திற்கு வரும். 

அவ்வளவுதான் மிகவும் எளிதான முறையில் ஆரோக்கியமான கம்பு லட்டு தயார். இதை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com