கர்நாடகா மற்றும் ஆந்திரா ஸ்பெஷல் மைசூர் பஜ்ஜி மற்றும் சாவ்கார் சப்ஜி!

Special Mysore Bhaji and Chawgar Sabji!
Bajjji - Sabji recipes
Published on

மைசூர் பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்

அரிசிமாவு – 2 மேசைக்கரண்டி

தயிர் – ¾ கப்

சோடாஉப்பு – 1 சிட்டிகை

இஞ்சி – 1 மேசைக்கரண்டி (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

மிளகு – ½ மேசைக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, உப்பு, சோடா, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அதனுடன் தயிரை ஊற்றி நன்கு கலக்கவும். மாவு இலகுவாகவும், அடிக்கடி கரண்டியால் எடுக்கக் கூடிய தட்டையான பதத்தில் இருக்கவேண்டும். மாவை 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம்வரை மூடி வைக்கவும்.

இது பஜ்ஜிக்கு நல்ல மென்மையையும் உள்ளே காற்றோட்டத்தையும் தரும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும். கையை சிறிது தண்ணீரில் நனைத்து, மாவை சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் விட்டுப் பொரிக்கவும். மிதமான தீயில், வெளியில் தங்கமஞ்சள் நிறமாக வரும் வரை பொறிக்கவும். எண்ணெயை வடிகட்டிப் எடுத்துவிட்டு, தேங்காய் சட்னி அல்லது மிளகாய் சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்.

தயிர் அதிகமாகி விட்டால் மாவு அதிக மெதுவாகி பஜ்ஜி எண்ணெய் உறிஞ்சும். சோடா அல்லது பேக்கிங் சோடா மிகவும் முக்கியம்.

இதையும் படியுங்கள்:
உணவுக்கு சுவையும், வாசனையும் கொடுக்கும் சாஸ் மற்றும் ஜாம் வகைகள்!
Special Mysore Bhaji and Chawgar Sabji!

சாவ்கார் சப்ஜி

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 1 (நறுக்கிய துண்டுகள்)

கேரட் – 1 (நறுக்கியது)

பீன்ஸ் – சிறிது (நறுக்கியது)

பட்டர் – ¼ கப்

பூசணிக்காய் அல்லது சீமை கத்தரிக்காய் – சிறிது

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

பூண்டு – 4 பல்

இஞ்சி – சிறிது

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க

மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்

மிளகாய்தூள் – 1 ஸ்பூன்

தனியாதூள் – 1 ஸ்பூன்

ஜீரகதூள் – ½ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)

அரைத்த மசாலா – அதிக சுவைக்கு

வறுத்த பட்டை, கிராம்பு, சோம்பு, கொத்தமல்லி விதை- ஒரு மேசைக்கரண்டி, தேங்காய் – 2 மேசைக்கரண்டி. இந்தப் பொருட்களை வறுத்து அரைத்து மசாலாவாக பயன்படுத்தலாம்.

செய்முறை:

காய்கறிகளை குக்கரில் உப்பு, சிறிது மஞ்சளுடன் நன்றாக வேகவைக்கலாம். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். அதில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
சத்தான சிறுதானிய இனிப்பு உருண்டையும், புரோட்டின் நிறைந்த தால் மிக்சரும்!
Special Mysore Bhaji and Chawgar Sabji!

மஞ்சள், மிளகாய் தூள், தனியாதூள், ஜீரகதூள் சேர்த்து வதக்கவும். வறுத்து அரைத்த மசாலா விழுதை இப்போது சேர்க்கலாம். பின்னர் வேகவைத்த காய்கறிகள் சேர்க்கவும். நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சற்று கொதிக்கவிடவும். சப்பாத்தி அல்லது ஜோள ரொட்டிக்கு பொருத்தமான கிரேவி பதம் இருக்கவேண்டும்.

கொத்தமல்லி தூவி பரிமாறவும். இந்த சப்ஜி ஒருநாள் கழித்து இன்னும் சுவையாக இருக்கும். நார்ச்சத்து அதிகமானது, காய்கறிகள் கொண்டதால் ஆரோக்கியம் தரும் உணவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com