நாக்கில் கரையும் காசி அல்வா: வெண்பூசணியில் ஆரோக்கியமான ஸ்வீட் செய்வது எப்படி?

kasi-halwa-recipe
kasi-halwa-recipe
Published on

ல்வா என்றாலே கோதுமை மாவில்தான் நாம் செய்து சாப்பிட்டு இருக்கோம். இன்று ஒரு காய்கறியில் (வெண்பூசணி) அல்வா செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இனிப்பு வகை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிசாப்பிடுவர். மேலும் இந்தக் கோடைக்காலத்திற்கு வெண்பூசணி சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி மற்றும் நீர்ச்சத்தையும் தருகிறது. அதிகமான உடல் எடை இருப்பவர்கள் இந்த வெண்பூசணி அல்வா சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள குறைந்த கலோரி மற்றும் அதிக அளவு நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

வெண்பூசணி வயிற்றுப் புண் மற்றும் அசிடிட்டி பிரச்னைகளைச் சரி செய்து குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. வெண்பூசணியில் அல்வா சமைப்பது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும். இது ஒரு பாரம்பரிய உணவாகும். சுவை மிகுந்த கமகமக்கும் காசி அல்வா செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வெண்பூசணி - ½ கிலோ

சர்க்கரை - 300 கிராம்

முந்திரி - 50 கிராம்

உலர் திராட்சை - 50 கிராம்

நெய் - 80 கிராம்

குங்குமப்பூ - சிறிதளவு

ஏலக்காய் பொடி - சிறிதளவு

செய்முறை:

வெண்பூசணியை நன்கு கழுவி தோல் மற்றும் விதை பகுதியை நீக்கிவிட வேண்டும். ஒரு துருவலில் வெண்பூசணியை நன்கு துருவி கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் துருவிய வெண்பூசணியை அதன் நீருடன் சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். வெண்பூசணி நன்கு வதங்கியவுடன் அதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். அல்வா பக்குவம் வரும் வரை வெண்பூசணி நன்கு வதக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
சுவையான கோடைக்கால ஸ்பெஷல்: மேங்கோ மஸ்தானி செய்வது இவ்வளவு ஈஸியா?
kasi-halwa-recipe

ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரியை நன்கு சிவந்து வரும்படி வறுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் உலர் திராட்சையை நன்கு உப்பி வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வெண்பூசணி நன்கு வெந்து வந்தவுடன் குங்குமப்பூ, ஏலக்காய்பொடி வறுத்து வைத்திருந்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து தேவையான அளவு நெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். அல்வா பக்குவத்தில் வரும்வரை நன்கு கலந்து கொள்ளவேண்டும். இதற்கு எந்தவித புட் கலரும் தேவையில்லை. குங்குமப்பூவின் கலர் மற்றும் சுவையே போதுமானது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் காசி அல்வா தயார். செயற்கையான புட்கலர் சேர்க்காததால் இதில் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் கடைகளில் கிடைக்கும் அல்வா வாங்கி சாப்பிடுவதை காட்டிலும் நாம் வீட்டிலேயே செய்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com