நாவில் நீர் ஊறும் கேரளா ஸ்பெஷல் இஞ்சிப்புளி!

இஞ்சிப்புளி
இஞ்சிப்புளிyoutube.com

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையான பொருட்கள்:

இஞ்சி – 3/4 கப்
புளி – எலுமிச்சம் பழ அளவு
பச்சை மிளகாய் – 7

எண்ணெய் – 4 தேக்கரண்டி
கடுகு – 3/4 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
வெந்தயப்பொடி (வறுத்துப்பொடித்தது) - 1/4 தேக்கரண்டி
வெல்லப் பாகு – 1 1/2 தேக்கரண்டி.

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி புளிக்கரைசலை தயார் செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்  கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து கொள்ளவும். 

தொடர்ந்து சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சியையும் கீறிய பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.ல இரண்ட்ம் நன்றாக வதங்கியதும்  புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
வாழ்வை மேம்படுத்தும் 3 ஆரோக்கியம்!
இஞ்சிப்புளி

புளிக்கரைசல் கெட்டித் தன்மைக்கு வந்ததும் வெல்லம்  சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். பின்னர் வறுத்து பொடி செய்து வைத்துள்ள வெந்தயத் தூளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

காரமும் புளிப்பும் கொண்ட  கேரளா ஸ்பெஷல் இஞ்சிப்புளி தயார்.

சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு மகிழுங்கள்!

logo
Kalki Online
kalkionline.com