கேரளாவில் இந்த தக்காளித் தொக்கைதான் டன் கணக்கில் சாப்பிடுவாங்கலாம்!

Kerala Thakkali Thokku
Kerala Thakkali Thokku
Published on

தக்காளியை வைத்து பல்வேறு விதமான உணவுகளை நாம் தயாரிக்கலாம். அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் தக்காளி தொக்கு. இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற பல்வேறு உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக தக்காளி தொக்கு செய்வார்கள். அந்த வகையில் கேரளாவில் செய்யப்படும் தக்காளி தொக்கு மிகவும் சுவையாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

  • தக்காளி - 1 கிலோ

  • வெங்காயம் - 2

  • இஞ்சி - 1 துண்டு

  • பூண்டு - 10 பல்

  • பச்சை மிளகாய் - 4 

  • கறிவேப்பிலை - 2 கொத்து

  • கடுகு - 1 தேக்கரண்டி

  • உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

  • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

  • மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

  • சர்க்கரை - 1 தேக்கரண்டி

  • எண்ணெய் - 4 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
இது மட்டும் தெரிஞ்சா உங்க உணவுகளில் தக்காளி அதிகமா சேர்க்க மாட்டீங்க!
Kerala Thakkali Thokku

செய்முறை:

  1. முதலில் தக்காளியை நன்றாகக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.

  3. பிறகு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  4. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும்.

  5. தக்காளி மசிந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

  6. பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தொக்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

  7. தொக்கு கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

  8. இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு தொக்கை இறக்கி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
கேரளா ஸ்பெஷல் அல்வா, பானாயி பத்திரி மற்றும் எறிசேரி!
Kerala Thakkali Thokku

இந்த கேரளா ஸ்டைல் தக்காளி தொக்கு செய்வது மிகவும் சுலபம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த சுவையான தொக்கை செய்யலாம். இந்த ரெசிபியை பயன்படுத்தி நீங்களும் வீட்டில் தக்காளி தொக்கு செய்து சுவைத்து மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com