இரவு தூங்கும் முன் நடப்பதால் கிடைக்கும் 4 நன்மைகள்!

Night walk
Night walk
Published on

டைப்பயிற்சி என்றால் காலை அல்லது மாலை இந்த இரு வேளைகளில் ஏதேனும் ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து நாம் நடைப்பயிற்சி மேற்கொள்வோம். அவரவர் வேலையை பொறுத்து, வாழ்க்கை கட்டமைப்பைப் பொறுத்து நேரத்தை தேர்வு செய்வோம். ஆனால், இரவு உறங்குவதற்கு முன்பு 30 நிமிடம் நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் இந்த 4 ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அது என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும்: இரவில் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் முக்கியமான நன்மை ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதுதான். இரவில் நடைப்பயிற்சி மற்றும் மிதமான உடற்பயிற்சி செய்வது தூக்கத்திற்கு உதவும் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதி செய்துள்ளன. இரவு நேர நடைப்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கவும், ஓய்வெடுக்கவும், ஆழமான தூக்கத்தைப் பெறவும் உதவும்.

2. உடல் எடையை குறைக்கும்: இரவில் 30 நிமிடங்கள் நடப்பது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதோடு தூக்கத்தின்போதும் கலோரிகளை எரிக்கும் அளவை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவி புரியும். இரவு நேரத்தில் அடிக்கடி நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை நிர்வகிக்கவும், உடல் எடை அதிகரிக்கவும் செய்யும். இரவு நேர ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும் உதவும்.

3. மன ஆரோக்கியத்திற்கு உதவிடும்: மாலை நேர அல்லது இரவு நேர நடைப்பயிற்சி உடலுக்கும், மனதுக்கும் நல்லது. மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை குறைக்க நடைப்பயிற்சி உதவும். இரவில் நடப்பது எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட உதவும். அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டு பார்க்க மனதுக்கும் நேரம் கொடுக்கும். மனதை தெளிவுடன் வைத்திருக்கவும் வழிவகை செய்யும்.

இதையும் படியுங்கள்:
வலிப்பு வந்தவர் கையில் இரும்புப் பொருட்களைக் கொடுக்கலாமா?
Night walk

4. செரிமானத்தை மேம்படுத்தும்: இரவு உணவு உண்ட பிறகு சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும். அது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் உலா வருவது செரிமானத்திற்கு உதவும். அசிடிட்டி, அஜீரணம் போன்ற அசௌகரியங்கள் ஏற்படாமல் தடுக்கலாம். இரவு நேர உலாவும் கூட நமது செரிமான அமைப்புகளின் செயல்பாடுகளை மென்மையாக்குகிறது. குமட்டல், வயிறு உப்புசம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்காமல் தூங்குவதற்கு உதவுகிறது. இனி இரவு நடந்து இனிமையான இரவாக ஆக்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com