கார்வாஸ்: மகாராஷ்டிராவின் பாரம்பரிய இனிப்பு!

Kharvas
Kharvas
Published on

மகாராஷ்டிராவின் பாரம்பரிய இனிப்புகளில் ஒன்றுதான் கார்வாஸ். தீபாவளி போன்ற பண்டிகைகளில் வீடுகளில் தயாரிக்கப்படும் இந்த இனிப்பு, அதன் தனித்துவமான சுவை மற்றும் மென்மையான தன்மையால் பலருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது. மாடு கன்று ஈன்ற பிறகு கிடைக்கும் முதல் பால், அதாவது சீம்பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இனிப்பு, ஆந்திராவில் ஜுன்னு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தப் பதிவில், மகாராஷ்டிரா ஸ்வீட் கார்வாஸ் செய்யும் முறையை விளக்கமாக பார்க்கலாம். இது வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய ஒரு இனிப்பு. எனவே, இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள்:

  • சீம்பால் - 750 மில்லி

  • பால் - 250 மில்லி

  • சர்க்கரை - 3 கப்

  • ஏலக்காய் - 2

  • சுக்கு - ஒரு துண்டு

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவை இனிப்பிற்கு நறுமணத்தைத் தரும்.

 பின்னர், ஒரு பாத்திரத்தில் சீம்பால் மற்றும் பசும்பால் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அடுத்ததாக அரைத்து வைத்த சர்க்கரை கலவையை இதில் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இட்லி, தோசை மாவை மூன்று நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தினால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள்!
Kharvas

இப்போது இந்த கலவையை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், கலவையில் ஏதேனும் துகள்கள் இருந்தால் அவை நீங்கிவிடும்.

வடிகட்டிய கலவையை ஒரு இட்லி பாத்திரத்தில் ஊற்றி, ஆவியில் சுமார் 20 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். இதனால் பால் திரண்டு, கெட்டியான பதத்திற்கு வரும். அவ்வளவுதான் சூப்பரான சுவையில் கார்வாஸ் தயார். 

மகாராஷ்டிரா ஸ்வீட் கார்வாஸ் செய்வது மிகவும் எளிது. மேற்கண்ட செய்முறையைப் பின்பற்றி, வீட்டிலேயே சுவையான கார்வாஸை தயாரித்து உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com