குழந்தைகளுக்குப் பிடித்த சாட் - ஸ்ட்ரீட் ஸ்டைல் RAGDA PATTICE!

Kid's Favorite Chat
tasty foods recipe
Published on

க்டா பாட்டீஸ் மும்பையின் தெருக்கள் மற்றும் மால்களில் விற்கப்படும் மிகப் பிரபலமான சாட் வகைகளில் ஒன்றாகும். அனைவராலும் விரும்பப் படும் மிக சுவையான இந்த சாட் ஐட்டத்தை வீட்டிலேயே சுலபமாக செய்து அசத்தலாம்.

ரக்டா பாட்டிஸ் செய்யத் தேவையானவை:

வெள்ளை பட்டாணி  - 2 கப்      

உருளைக்கிழங்கு     - 6

வெங்காயம்          - 3

தக்காளி              - 3

பச்சை மிளகாய்       - 2

சீரகம்                - 1  ஸ்பூன்

இஞ்சி துருவல்       -  1 ஸ்பூன்          -

மஞ்சள் தூள்,சீரக தூள் – தலா 1ஸ்பூன்

கரம் மசாலா          - 1 ஸ்பூன்

சாட் மசாலா          - 2 ஸ்பூன்

சோள மாவு           - சிறிது

உப்பு                  தேவையான அளவு

கொத்தமல்லி         - சிறிது

நெய்                 - 5 ஸ்பூன்

செய்முறை:

பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை பட்டாணியை வேகவிடவும்.

இதையும் படியுங்கள்:
தைப்பூசம் நைவேத்தியம் - திருப்பாகம் - பஞ்சாமிர்தம் - செய்வது எப்படி?
Kid's Favorite Chat

இதேபோல உருளைக்கிழங்கை குழையாமல் வேகவைக்கவும .முதலில் நான்கு வேகவைத்த உருளைக்கிழங்குடன் சீரக தூள், கரம் மசாலா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சோளமாவு சேர்த்து மசிக்கவும். இதனுடன் உப்பு, சிறிது கொத்தமல்லி சேர்த்து சிறிய உரூண்டைகளாக செய்து கட்லெட்டுக்கு செய்வது போல தட்டி வைக்கவும்.

சூடான தோசை தவாவில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்த உருளை கிழங்கு கட்லெட்டுகளைப்போட்டு இரண்டு பக்கமும் சிவக்குமாறு ரோஸ்ட் செய்து எடுக்கவும். பாட்டீஸ் ரெடி.

அடுத்ததாக கடாயில் மூன்று ஸ்பூன்  நெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு டீஸ்பூன் சீரகம் போட்டு பொரிந்தவுடன்  பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதன் பிறகு நறுக்கிய இஞ்சி  மற்றும் அரை ஸ்பூன் கரம் மசாலா சேர்க்கவும். தொடர்ந்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் ஒரு கொதி வந்ததும் தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போடவும்.

மசாலா பொருட்கள் மற்றும் தக்காளியின் பச்சை வாடை போக கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதன் பிறகு இரண்டு வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் வெந்த பட்டாணியை சேர்க்கவும். இதனுடன் ரக்டாவிற்கு தேவையான அளவு உப்பு போடவும். இறுதியாக ஒரு ஸ்பூன் சாட் மசாலா மற்றும் கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டால் ரக்டா தயார்.

ஒரு தட்டில் இரண்டு பாட்டீஸ்களை வைத்து அதன் மீது ரக்டாவை பரவலாக ஊற்றவும். பிறகு ஸ்வீட் சட்னி, கிரீன் சட்னிகளை  மேலாக ஊற்றிக் கொஞ்சம் நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஓம்பொடி மற்றும் கொத்தமல்லி தூவினால் சுவையான சத்தான ரக்டா பாட்டிஸ் ரெடி. குழந்தைகள் இந்த சாட்டை வாவ் சூப்பர் என ஆசையாக சாப்பிடுவார்கள்.  

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய ரெசிபிஸ் 2 - கொழுப்பு குறைய கொள்ளு ரசம், சளி பிரச்னைக்கு தனியா துவையல்
Kid's Favorite Chat

ஸ்வீட் சட்னி: சிறிது புளி, வெல்லம், பேரிச்சம் பழம், சீரகத்தூள், மிளகாய் பொடி, உப்பு தண்ணீர் சேர்த்து அரைத்து கொதிக்கவிட்டு எடுக்கவேண்டும்.

கிரீன் சட்னி: சிறிது கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், எலுமிச்சைசாறு, உப்பு தண்ணீர் சேர்த்து அரைத்தெடுத்தால் கிரீன் சட்னி ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com