
உடல் எடை, கொழுப்பை குறைக்கவும், காய்ச்சல், உடல் சோர்வு, பித்தம், சளி பிரச்சனை உள்ளவர்களுக்கு அருமையான 2 ரெசிகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்
தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
பூண்டு - 10 பல்
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு
தாளிக்க
கடுகு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை
செய்முறை
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* புளியை தண்ணீர் ஊற்றி வைத்து கரைத்து கொள்ளவும்.
* சூடான காடயில் கொள்ளு பயறை போட்டு வாசனை வரும் வரை நன்றாக வறுத்து ஆற விடவும். நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* அடுத்து தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பாதி கொத்தமல்லியை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த தக்காளி விழுது, அரைத்த கொள்ளு ஆகியவற்றை அடி கனமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் மற்றும் 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கரைத்து வைத்துள்ள அனைத்தையும் அந்த கடாயில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு நுரை வரும் வரை சூடாக்கவேண்டும். நுரை வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். கொள்ளு பயறை நன்றாக வறுத்து விடுவதால் நன்றாக கொதிக்க வேண்டும் என்று அவசியமில்லை.
இப்போது சுவையான மற்றும் சத்தான கொள்ளு ரசம் தயார்.
தனியா துவையல்
சளி, இருமல், காய்ச்சல், பித்தம், வாந்தி பிரச்னை உள்ளவர்கள் இந்த துவையல் செய்து சாப்பிட்டால் குணமாகும். உடலில் அதிகளவு கொழுப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த துவையல் ஏற்றது.
தேவையான பொருட்கள்
தனியா - ஒரு கைப்பிடி
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை- சிறிதளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவிடவும், தனியா கருகிவிடக்கூடாது. ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும். அனைத்தும் நன்றாக அரைந்ததும் கடைசியாக பூண்டு, சீரகம், கறிவேப்பிலை போட்டு ஒரு சுற்று சுற்றி விடவும். நைசாக அரைக்க கூடாது. அரைத்ததை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
இப்போது தனியா துவையல் ரெடி. இந்த தனியா துவையல் சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.