
அறை வெப்பநிலையில் இரண்டு முதல் நான்கு மணிநேரத்திற்கும் மேலாக சமைத்த உணவை வெளியே வைக்கவேண்டாம். பேசில்லஸ் செரியஸ் என்ற பாக்டீரியா விரைவாகப் பெருகும் என்பதால் சமைத்த உணவை ஒரு மணிநேரத்திற்கும் மேல் வெளியே வைக்க வேண்டாம் என்கிறார்கள்.
உணவை சமைத்து மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிடுவது ஆரோக்கியமானது, அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்கு மேலாக சேமித்து வழங்கப்படும் பழைய உணவை உண்பது தீங்கானது, இதனால் வயிறு, குடல் ஆரோக்கியம் கெடும் என்கிறார்கள்.
அன்றாடம் காய்கறிகள் பழங்களை வாங்கி சமைக்க முடியாமல்தான் பிரிட்ஜ் பயன்படுத்துகிறோம். நாம் வாங்கி வந்ததில் இருந்து முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து விதமான காய்கறிகளையும் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இதேபோல், கீரை வகைகளை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்திக்கொள்ள முடியும். சப்பாத்தி மாவை நீங்கள் பிசைந்தவுடன் செய்து சாப்பிடுவது நல்லது. இந்த மாவை பிரிஜில் வைத்து சூடுபண்ணி சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
அசைவ உணவுகளையும் மூன்று நாட்கள்வரை ஃப்ரிட்ஜில் வைத்து நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக, சமைத்த உணவுகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. இறைச்சியை நான்கு மணி நேரம் மட்டுமே திறந்த வெளியில் வைத்திருக்கலாம்; அதற்கு மேல் வைத்திருந்தால், நுண்ணுயிர்கள் தாக்கி கெட்டுவிடும்' என, கால்நடை டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
உணவுப் பொருள்களின் காலாவதி தேதியானது, உணவு உட்கொள்வதற்கு பாதுகாப்பற்றதாக இருக்கும் தேதியைக் குறிக்கிறது. best before' தேதிக்கு பின்பும், உணவை உட்கொள்ளலாம் என்றாலும், காலாவதி தேதிக்கு பின் உணவை உட்கொண்டால் அது உங்கள் உடல் நலத்திற்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.
எண்ணெய்களை அடுப்புக்கு அருகில் சேமித்து வைப்பதை தவிர்க்கவும். அதிலிருந்து வரும் வெப்பம் ஆக்சிஜனேற்ற செயல்முறையை துரிதப்படுத்துகிறது, எண்ணெயை கெட்டுப்போக வைக்கிறது. ஆக்ஸிஜனேற்றமானது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகிறது மற்றும் புற்றுநோயை உண்டாக்குகிறது, சமையல் எண்ணெய்கனை கண்ணாடி பாட்டில்களில் இருட்டான மறைவான இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் அதனை பயன்படுத்திவிடுவது நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
இயற்கையாக கிடைக்கும் உப்பு பழுப்பு நிறத்தில் சற்றே அழுக்கடைந்த படி இருக்கும். அதுதான் அயோடின் நிறைந்த நல்ல உப்பு,அந்த கல் உப்பின் குறைவான பயன்பாடே தைராய்டு கோளாறுகளுக்கு காரணம். கடைகளில் விற்கப்படும் கல் உப்பை நேரடியாக பயன்படுத்தாமல் ஒரு தாம்பாளத்தில் போட்டு ஒருமணி நேரம் வெயிலில் காயவைத்து பின்னரே பயன்படுத்த வேண்டும்.
இரும்பு கடாயில் எந்த உணவுகளை சமைக்கக்கூடாது தெரியுமா? இருமபு கடாயில் முட்டையை சமைக்கக்கூடாது. ஏனெனில் முட்டை அதில் ஒட்டிக்கொண்டு எடுப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துமாம். அமில தன்மைக் கொண்ட தக்காளியை அதிகமாக இரும்பு கடாயில் போட்டு சமைக்கக்கூடாது.
இவை சுவை மாறுவதுடன், சில உடல் பிரச்சனையையும் ஏற்படுத்துமாம். இதே போன்று பன்னீர் போன்ற பால் பொருட்களை இரும்பு கடாயில் சமைத்தால் அது உடைந்து போவதுடன், சுவையும் மாறிவிடுமாம். இரும்பு கடாயில் சமைத்த பால் பொருட்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு என்றும் கூறப்படுகின்றது. கடல் உணவான மீனையும் இரும்பு கடாயில் சமைக்கக்கூடாதாம். ஏனெனில் மீன் மென்மையானது என்பதால் இரும்பு கடாயில் சமைத்தால் உடைந்து போய்விடும்.
குக்கரில் சமைக்கக்கூடாத உணவுகளில் கீரை, கோஸ், ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறி வகைகளும் உள்ளடங்குகின்றன. பச்சை காய்கறிகள் அதிகமாக வெந்துவிட்டால் அதனை சாப்பிடுவது கஷ்டமாக இருக்கும். அதேபோல் பால் பொருட்களான சீஸ் போன்றவைகளையும் குக்கரில் சமைக்கக் கூடாது.
உணவில் மஞ்சள் தூள் சேர்த்து சமைப்பதைவிட, எந்த உணவாக இருந்தாலும் சமைத்து முடித்தவுடன், இறக்கும்போது அதில் 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து இறக்கினால் மஞ்சளின் மருத்துவ குணம் அப்படியே கிடைக்கும் மஞ்சள் தூள் ஓர் கிருமி நாசினி புற்றுநோய் வராமல் தடுக்கும் என்கிறார்கள்.