Know these 6 things to become an expert in cooking!
cooking tips

நீங்க சமையல்ல எக்ஸ்பர்ட் ஆக இந்த 6 விஷயத்தை தெரிஞ்சுக்கங்க!

Published on

மையல் என்பது ஒரு கலை. அதில் கை தேர்ந்த நிபுணராக ஆவதற்கு சில நுணுக்கங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் சமையல் எக்ஸ்பர்ட்டாக தெரிந்துகொள்ள வேண்டிய 6 விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

1. அம்மியில் அரைத்து வைப்பது:

முந்தைய காலங்களில் அம்மியில் அரைத்த மசாலாவை தான் சமையலுக்கு பயன்படுத்தினார்கள். மிக்ஸி, கிரைண்டரில் அரைப்பதை விட அம்மியில் அரைத்து வைக்கும் உணவுகளின் சுவை கூடுதலாக இருப்பதோடு அதே பாரம்பரிய சுவையை கொண்டு வந்துவிடும்.

2. ஆட்டு உரல்:

மாவு அரைப்பதற்கு, பூண்டு, இஞ்சி, மசாலாக்கள் ஆகியவற்றை அரைப்பதற்கு அம்மியைபோல் பயன்படும் மற்றொரு பொருள்தான் ஆட்டு உரல். இயற்கையாக எண்ணெய், மனம் ஆகியவற்றை வெளிப்படுத்த உதவுவதோடு,இதில் அரைத்து வைக்கக் கூடிய உணவுகள் கூடுதல் மனம் மிகுந்ததாக இருக்கும்.

3. நல்லெண்ணெய் சமையல்:

பெங்காலி, பீகாரி தமிழர்கள் போன்றவர்களின் பாரம்பரிய சமையலில் சைவம், அசைவம் எந்த வகை உணவாக இருந்தாலும் நல்லெண்ணெய் சமையல்தான். ஏனெனில் நல்லெண்ணையில் சமைப்பது உணவின் சுவையை தூக்கலாக இருக்க வைக்கும்.

இதையும் படியுங்கள்:
மருத்துவகுணம் நிறைந்த குறிஞ்சான் கீரை தொக்கு - மணலிக்கீரை (Manalikeerai) மசியல் செய்வோமா?
Know these 6 things to become an expert in cooking!

4. முழு மசாலாக்கள்:

மசாலா பொடிகள் சேர்க்காமல் முழுவதுமாக இருக்கும் கருப்பு மிளகு, ஏலக்காய், சீரகம், சோம்பு, கிராம்பு உள்ளிட்டவைகளை சமையலுக்கு முன் பயன்படுத்துவது, உணவின் சுவையை கூட்டுவதுடன் மருத்துவ பயன்களை தரக் கூடியதாகும். கருப்பு மிளகு, சீரகம் போன்றவை உடலை எப்போதும் கதகதப்பாக வைத்திருக்கும். இவைகள் சளி, இருமலில் இருந்து விடுபடவும் உதவுகின்றன.

5. புதிதாக அரைத்த மசாலா:

இந்திய உணவுகளின் சுவைக்கு மிக முக்கியமான காரணம் உடனடியாக அரைத்த மசாலாக்களை சமையலுக்கு பயன்படுத்துவது தான். கடைகளில் விற்கும் பாக்கெட் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட மசாலாக்கள் இல்லாமல் வீட்டிலேயே ஃபிரஷாக அரைத்த இஞ்சி-பூண்டு பேஸ்ட் போன்ற மசாலாக்களை பக்குவதாக அரைத்து சேர்ப்பது உணவின் சுவை தூக்கலாக இருப்பதற்கு மிக முக்கியமானது.

6. சமையல் நுணுக்கங்கள்:

எந்த உணவை எப்படி சமைத்தால் ருசியாக இருக்கும் என தெரிந்து கொண்டு பலவிதமான உணவுகளை தயாரிக்கும் சமையல் நுணுக்கங்கள் இந்திய சமையலில் பயன் படுத்தப்படும் மிக முக்கியமான முறையாகும். சில உணவுகளை நேரடியாக எண்ணெய்யில் பொரிப்பது, சிலவற்றை வேகவைத்து எண்ணெய்யில் பொரிப்பது, சிலவற்றை தீயில் சுடுவது, இன்னும் சில உணவுகளை மிதமான தீயில் மெதுவாக வேக வைப்பது, சில அசைவ உணவுகளை விறகு அடுப்பில் மட்டுமே வைத்து சமைப்பது என பல விதமான முறைகளை கையாள்வதால் ஒவ்வொரு உணவும் ஒரு தனித்துவம் பெற்றதாக இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்!
Know these 6 things to become an expert in cooking!

சமையல் சுவையாகவும் மனமாகவும் இருக்க சமைப்பவர்கள் தூய மனதுடனும், பொறுமையுடனும் சமைத்தால் சமையல் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com