
கொள்ளுப்பயறு பிரியாணி
தேவையான பொருட்கள்:
கொள்ளுப் பயறு (4 மணி நேரம் ஊறவைத்தது) ஒரு டம்ளர்
அரிசி 1 ½ டம்ளர்
பிரிஞ்சி இலை 2 No
அன்னாசி பூ 2 No
சோம்பு ஒரு டீஸ்பூன்
கசகசா ஒரு டீஸ்பூன்
பட்டை சிறியது 2 No
உலர் ரோஜா இதழ்கள் சிறிதளவு
கிராம்பு 2 No
ஏலக்காய் 2 No
முந்திரி பருப்பு ‘10 No
பச்சை மிளகாய் 4 No
பெரிய வெங்காயம் 4 No
தக்காளி 2 No
இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
பொதினா ஒரு கைப்பிடி
கொத்து மல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
நல்லெண்ணெய் 100 ml
நெய் 4 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
முதலில் பொதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரிசியை நன்கு கழுவி ஊறவைத்த கொள்ளுப் பயறுடன் சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து மிதமான தீயில் கசகசாவை வறுத்து எடுத்து பிறகு சோம்பு, கிராம்பு ஏலக்காய் ரோஜா இதழ்களை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் ஆறவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றிவிட்டு அதனுடன் பொதினாவையும் பச்சை மிளகாயையும் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து முந்திரிப் பருப்பை உடைத்து சிவக்க வறுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை பிரிஞ்சி இலை அன்னாசி பூ ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து வதங்கவிட்டு பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாப் பொருள்களையும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறிபச்சை வாசனை போனதும் எலுமிச்சைசாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு கலந்து கொதித்து வரும்போது அதில் அரிசி பருப்பு கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடிவைக்கவும்.
மூன்று விசில் வந்ததும் இறக்கி வைத்து சிறிது நேரம் கழித்து திறந்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறவும். இதற்கு side dish ஆக உருளைக்கிழங்கு கத்தரிக்காய் fry மற்றும் பீட்ரூட் பச்சடி சூப்பர் காம்போ ஆக இருக்கும்.
பீட்ரூட் பச்சடி
Medium size பீட்ரூட் 1 No
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் கால் ஸ்பூன்
முந்திரி திராட்சை தலா 10 No
கொத்துமல்லி இலை சிறிதளவு
தயிர் 2 கப்
மிளகுத்தூள் (pepper) 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை
உப்பு தேவைக்கேற்ப
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி விட்டு குக்கரில் அல்லது ஆவியில் வேகவைத்து நன்றாக துருவி வைத்துக்கொள்ள வேண்டும்.
முந்திரி திராட்சை தேங்காய் துருவல் ஆகியவற்றை கால் ஸ்பூன் நெய்யில் பொர்த்து எடுக்கவும்.
பீட்ரூட்டை கொத்தமல்லி தழை மிளகுத்தூள் (pepper ) உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசறி கொண்டு அதனை தயிரில் கலந்து பொரித்து வைத்துள்ள முந்திரி திராட்சை கலவையை சேர்த்து நன்கு கலந்து பரிமாறலாம்.
உருளைக்கிழங்கு கத்தரிக்காய் Fry
தேவையான பொருட்கள்:
பெரிய அளவு உருளைக் கிழங்கு 1 No
கத்தரிக் காய் 5 No
pepper பொடி 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
கறிவேப்பிலை வேர்க்கடலை பொடி 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் மூன்று ஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு நீளவாக்கில் குச்சிகளைப்போல நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
கத்தரியை காம்பு நீக்கி மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் உருளைக்கிழங்கை போட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறி மூடிவைக்கவும். உருளைக்கிழங்கு அரை வேக்காடு வெந்ததும் அதனுடன் நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து அதனுடன் மிளகுத்தூளையும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். இரண்டும் நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை வேர்க்கடலை பொடி தூவி இறக்கவும்.
குழந்தைகளுக்கு சுவையான ஆரோக்கியமான lunch box ரெடி.