
சிறுதானியங்களில் ஸ்மூத்தி செய்து பழகிவிட்டால் அடிக்கடி அதை சாப்பிடத் தோன்றும். செய்வதும் எளிது. அதிலிருந்து குதிரைவாலி மசாலா ஸ்மூத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
செய்ய தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி- 1/4 கப்
பயத்தம் பருப்பு - மூன்று டேபிள் ஸ்பூன்
அரிந்த மென்மையான காய்கறிகள் அனைத்தும் சேர்ந்து- ஒரு கப்
தேங்காய் பால்- அரைகப்
சின்ன வெங்காயம் அரிந்தது- கால் கப்
கடுகு ,உளுந்து- தாளிக்க தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
புதினா மல்லி கருவேப்பிலை எல்லாம் சேர்த்து ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் -ஒன்று
காய்ந்த மிளகாய்- ஒன்று
எண்ணெய், உப்பு- தேவைக்கு ஏற்ப
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும். கருவேப்பிலை, உளுந்து, மிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு, சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகளை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும். பின்னர் தேங்காய் பால் சேர்த்து புதினா, மல்லி, கருவேப்பிலை, சேர்த்து கிளறி இறக்கவும். இந்த மசாலா ஸ்மூத்தி குளிர்காலத்தில் அருந்துவதற்கு அசத்தலாக இருக்கும். நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்க.
பேபி கார்ன் புதினா ரைத்தா
செய்ய தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் சின்ன துண்டுகளாக நறுக்கியது- 1 கப்
புதினா -ஒரு கட்டு
கெட்டித் தயிர்- ரெண்டு கப்
நெய்- ரெண்டு ஸ்பூன்
தாளிக்க- கடுகு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், லவங்கம், பட்டை, வர மிளகாய் எல்லாம் தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் பேபி கார்ன் துண்டுகளுடன் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும். வெந்து ஆறிய பிறகு வாணலியில் நெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போட்டு வறுக்கவும். கடைசியாக புதினா இலைகளை போட்டு நன்றாக வதக்கி, அதன்பின் தயிரை தண்ணீர் ஊற்றாமல் கடைந்து அதில் வறுத்த அனைத்தையும் பேபிக்கானுடன் போட்டு நன்கு கலந்து வைக்கவும். சுவையான ரைத்தா தயார். இதனை பேபி கார்ன், காலிபிளவர் புலாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.