பூரி நன்றாக உப்பி வரவேண்டுமா? இதோ குட்டி குட்டி சமையல் டிப்ஸ்!

Kutty Kutty  Samayal Tips!
healthy samayal tips
Published on

தேங்காய் துருவலில் நன்கு சூடான வெந்நீர் விட்டு பிறகு பிழிந்தால் நிறைய பால் கிடைக்கும் திரும்பி பால் எடுக்க வேண்டிய தேவை இருக்காது. 

உளுந்து மாவு அரைக்கும்போது ஐஸ் வாட்டர் அல்லது மண்பானையில் வைக்கப்பட்ட ஜில்லென்ற தண்ணீரையும் ஊற்றி அரைத்தால் மாவு நிறைய கிடைக்கும் இட்லி, தோசையும் மிருதுவாக இருக்கும். 

வெங்காய தோசை இரண்டு பக்கமும் நன்கு வந்தால் தான் தோசை மிகுந்த சுவையாக இருக்கும் மேலும் சுவையாக இருக்க தோசையின் நடுவில் சிறிதாக ஓட்டை போட்டு அதில் எண்ணெயை ஊற்றினால் தோசை இன்னும் சுவையாக இருக்கும். 

பூரி சுடும்போது அது நன்றாக உப்பி வரவேண்டுமானால் பூரி மாவு பிசையும்போது சிறிதளவு நெய்யும் மிதமான சூட்டில் வெந்நீரையும் விட்டு பிசைந்து சுட்டெடுத்தால் பூரி நன்கு உப்பி சாப்பிட மிருதுவாக இருக்கும்.

எண்ணெய் உபயோகிக்கும் பாத்திரங்கள் தோசைக்கல் போன்றவற்றில் எண்ணெய் பிசுக்கு காணப்பட்டால் அதை அகற்ற பாத்திரங்கள் சூடாக இருக்கும்போது சிறிது மோர் விட்டு தேய்த்து பின் தேங்காய் நாரினால் அழுத்தி தேய்த்து கழுவினால் பிசுக்கு போய்விடும். 

குக்கரின் ரப்பர் வளையம் தளர்ந்துவிட்டால் அதை பிரிட்ஜில் அல்லது குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் இரண்டு நாட்கள் வைத்து அதன் பின்னர் உபயோகித்தால் பழைய நிலைபோன்று இறுக்கம் ஆகிவிடும். 

பச்சை காய்கறிகளை கூடையில் போட்டு ஒரு ஈரத்துணியால் மூடிவிட்டால் மூன்று நான்கு நாட்கள் வாடாமல் புத்தம் புது காய்கறிகளை போன்று இருக்கும். 

இதையும் படியுங்கள்:
வித விதமான சூப்பர் சுவையில் சில ஸ்வீட் டிப்ஸ்..!
Kutty Kutty  Samayal Tips!

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து ரொம்ப நேரம் ஊறவைத்து சப்பாத்தி தயார் செய்தால் உப்பலாக வரும். 

சைடு டிஷ்ஷுக்கு வெள்ளை நிற கிரேவியை தயாரிக்க முந்திரிப்பருப்பு பாதாம் பருப்பு போன்றவற்றை மசாலாவுடன் சேர்த்து அரைத்து கிரீமுடன் கலந்து கிரேவி செய்தால்வெள்ளை கலரில் கிடைக்கும்..

அரிசி பருப்பு இரண்டிலும் தலா ஒரு டம்ளர் எடுத்துக் கண்டு நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து நெய் மிளகு சீரகம் இஞ்சி கருவேப்பிலை தாளித்து கலந்தாலே பொங்கல் நன்றாக மசிந்து விடும் நன்றாக வேக வைப்பதில் தான் பொங்கல் குழைவது இருக்கிறது.

காய்கறிகளில் பிரட்டல் செய்யும்போது அதை முதலில் சாப்பிடுபவர்கள் உப்பு காரம் அதிகம் என்று சொல்லிவிட்டால் கவலைப்பட வேண்டாம் மீண்டும் அடுப்பில் வைத்து சூடாகி சிறிது பச்சரிசி மாவு தூவி ஒரு ஸ்பூன் நெய் போட்டு இறக்கினால் உப்பு காரம் குறைந்து மிகவும் சுவையாக இருக்கும். 

இட்லி சாம்பார் கெட்டியாக இருந்தால் வெறும் தண்ணீர் விடாமல் உப்பு மற்றும் மிளகு, சீரகத்தூள் வறுத்து பொடி செய்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து குழம்பில் ஊற்றி கிளறி இறக்கினால் வாசனையும் ருசியும் மாறாமல் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
வெஜிடபிள் இட்லியும், இலை இனிப்பு அடையும்!
Kutty Kutty  Samayal Tips!

மைசூர்பாக் செய்யும்போது ஆட்காட்டி விரலில் பாகை தொட்டுக்கொண்டு கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து பிடிக்கும்போது நூல் இழை வந்தால் அதுதான் பாகுபதம்.

கோதுமை மாவை கரைத்து தோசை சுடும் முன் மாவில் சிறிது எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் கருவேப்பிலை சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து மாவில் கலக்கினால் கோதுமை தோசை அருமையாக இருக்கும். 

இடியாப்பத்திற்கு தேங்காய் பாலில் இரண்டு ஏலக்காய் தட்டி போட்டால்  மணக்கும் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com