சுவையான தக்காளி துவையல் - பூண்டு தொக்கு செய்யலாம் வாங்க!

delicious tomato-garlic dip!
Tomatto - garlic recipe
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

ன்றைக்கு சுவையான தக்காளி துவையல் மற்றும் பூண்டு தொக்கு ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

தக்காளி துவையல் செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

இஞ்சி-1துண்டு.

பச்சை மிளகாய்-2

பூண்டு-5

தக்காளி-3

காய்ந்த மிளகாய்-3

மல்லித்தூள்-1 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.

புளி-சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

வெல்லம்-1 துண்டு.

தக்காளி துவையல் செய்முறை விளக்கம்.

முதலில் ஃபேனில் எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2, பூண்டு 5 சேர்த்து வதக்கிய பிறகு 3 நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கிவிட்டு 3 காய்ந்த மிளகாய், மல்லித்தூள் 1 தேக்கரண்டி, சீரகத்தூள் ½ தேக்கரண்டி சேர்த்து பச்சை வாசம் போனதும் அடுப்பை அணைத்து விட்டு சிறிய அளவு புளி, கொத்தமல்லி சிறிதளவு, உப்பு தேவையான அளவு, வெல்லம் 1 சின்ன துண்டு சேர்த்து கலந்துவிட்டு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்தால் சுவையான தக்காளி துவையல் தயார். இதை தோசை, இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பூண்டு தொக்கு செய்ய தேவையான பொருள்.

பூண்டு-200 கிராம்.

புளி-50 கிராம்.

நல்லெண்ணெய்-200ml.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-3 தேக்கரண்டி.

உப்பு-1 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி.

சர்க்கரை-2 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான கருப்பு உளுந்து அடை - சோயா பட்டாணி சால்னா ரெசிபிஸ்!
delicious tomato-garlic dip!

பூண்டு தொக்கு செய்முறை விளக்கம்.

முதலில் 200 கிராம் பூண்டை உரித்து எடுத்துக்கொண்டு அதில் 100 கிராமை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு 50 கிராம் புளியை ஊறவைத்து வேர் நீக்கி பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் 200ml நல்லெண்ணெய் சேர்த்து 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்றாக பொரிந்ததும் 100 கிராம் உரித்த பூண்டை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் பூண்டு பேஸ்ட் மற்றும் புளி பேஸ்டை  சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கிண்டிவிடவும்.

பூண்டில் எண்ணெய் பிரிந்து வந்ததும் 3 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிட்டு நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி சேர்த்துவிட்டு 2 தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால்' சுவையான பூண்டு தொக்கு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com