இன்றைக்கு சுவையான கோதுமை ரவை பிரியாணியும் பேச்சுலர் ஸ்பெஷல் தக்காளி ஊறுகாயும் எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் என்று பார்ப்போம்.
கோதுமை ரவை பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை-1 டம்ளர்.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
கிராம்பு-1
பட்டை-1
சோம்பு-1 தேக்கரண்டி.
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
தக்காளி-1
புதினா, கொத்தமல்லி- சிறிதளவு.
கேரட்-1/2 கப்.
பீன்ஸ்-1/2 கப்.
பச்சை பட்டாணி-1/2 கப்.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கல் உப்பு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
தண்ணீர்-3 டம்ளர்.
கோதுமை ரவை பிரியாணி செய்முறை விளக்கம்:
முதலில் 1 டம்ளர் கோதுமை ரவையை எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் குக்கரை வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் 1 தேக்கரண்டி சோம்பு, 1 பட்டை, 1 கிராம்பு சேர்த்து பொரிய விட்ட பிறகு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2 சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
இப்போது இதில் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 1 நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இப்போது சிறிது புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். அதில் நறுக்கிய கேரட் ½ கப், நறுக்கிய பீன்ஸ் ½ கப், பச்சை பட்டாணி ½ கப் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு 1 தேக்கரண்டி கரம் மசாலா, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்றாக கிண்டிவிட்ட பிறகு 1 டம்ளர் ரவைக்கு 3 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
கடைசியாக கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக தண்ணீர் கொதித்து வரும்போது 1கப் கோதுமை ரவையை சேர்த்து நன்றாக கிண்டிவிட்டு குக்கரை மூடி 4 விசில் விட்டு எடுக்கவும். அவ்வளவுதான். அல்டிமேட் சுவையில் கோதுமை ரவை பிரியாணி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.
தக்காளி ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி -1 கிலோ.
எண்ணெய்-3 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
வெந்தயம்-1/2 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1 ½ தேக்கரண்டி.
பூண்டு-15
கல் உப்பு-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்- 1 ½ தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
புளி-சிறிதளவு.
தக்காளி ஊறுகாய் செய்முறை விளக்கம்:
முதலில் 1 கிலோ தக்காளியை நான்காக வெட்டி மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட்டாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 3 தேக்கரண்டி எண்ணெய்விட்டு 1 தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி வெந்தயம் விட்டு நன்றாக பொரிய விடவும். பெருங்காயத்தூள் 1 ½ தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் 15 பல் பூண்டை இரண்டாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும். பூண்டு நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்திருந்த தக்காளி பேஸ்ட்டை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
இதில் 1 தேக்கரண்டி கல் உப்பு, 1 ½ தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இத்தோடு புளி சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். இப்போது மூடி போட்டு சுண்ட விடவும். கடைசியாக சுண்டி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கிவிடவும். அவ்வளவுதான். வேற லெவல் டேஸ்டில் தக்காளி ஊறுகாய் தயார். இதை சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவை அல்டிமேட்டாக இருக்கும். இந்த ஊறுகாயை 15 நாட்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். கெட்டுப் போகாமல் இருக்கும். கண்டிப்பாக இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.