
இன்றைக்கு மிகவும் டேஸ்டியான கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் மற்றும் அசோகா அல்வா ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்;
முட்டைகோஸ்-2கப்.
கேரட்-1
பீன்ஸ்-1கப்.
சிறுபருப்பு-2 தேக்கரண்டி.
தேங்காய் எண்ணெய்-4 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-4
பச்சை மிளகாய்-2
வெங்காயம்-1
கருவேப்பிலை-சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
துருவிய தேங்காய்-1 கப்.
பெருங்காயத்தூள்-சிறிதளவு.
கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் செய்முறை விளக்கம்.
முதலில் 2 கப் அளவிற்கு முட்டைகோஸ்ஸை நன்றாக வெட்டிக்கொள்ளவும். கேரட் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் பீன்ஸ் பொடியாக நறுக்கியது 1 கப் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது 2 தேக்கரண்டி சிறுபருப்பை சுடுத்தண்ணீரில் பாதி வேகவைத்துக் கொள்ளவும். இதில் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ், கேரட், முட்டைகோஸை சேர்த்து ரொம்ப வேக விடாமல் ஒரு 5 நிமிடம் சுடுதண்ணீரில் இருந்தால் போதுமானது. இதை எடுத்து நன்றாக வடிகட்டி பிழிந்து தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் தேங்காய் எண்ணெய் 4 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 4, உளுந்து 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கியது 2, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் 1 சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு பாதி வேக வைத்து வைத்திருக்கும் முட்டைகோஸ், கேரட், பீன்ஸை சேர்த்துக் கொள்ளவும். இப்போது 1 கப் துருவிய தேங்காய், பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கினால், டேஸ்டியான கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்கள்;
பொடி செய்ய,
ஜாதிக்காய்-1 துண்டு.
பச்சைகற்பூரம்-சிறிதளவு.
ஏலக்காய்-10
சர்க்கரை-1 கப்.
அல்வா செய்ய,
நெய்-2 கப்.
மைதா-1/4 கப்.
அரிசி மாவு-1/4 கப்.
பாசிப்பருப்பு-2 கப்.
சர்க்கரை-2 கப்.
முந்திரி-10
திராட்சை-10
மெலன் விதைகள்-சிறிதளவு.
கேசரி பவுடர்-சிறிதளவு.
அசோகா அல்வா செய்முறை விளக்கம்;
முதலில் பாசிப்பருப்பு 2 கப் எடுத்து நன்றாக கழுவிய பிறகு குக்கரில் தண்ணீர் விட்டு பாசிப்பருப்பை சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும். ஜாதிக்காய் 1 துண்டு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் 10, சர்க்கரை 1 கப் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் நெய் 2 கப் சேர்த்து அதில் மைதா ¼ கப், அரிசிமாவு ¼ கப், வேகவைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிண்டிவிடவும். இதில் 2 கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கிண்டிவிடவும். நடுவே சிறிது நெய்விட்டு கிண்டவும். இதில் சிறிது கேசரி பவுடரை சேர்க்கவும்.
இப்போது நெய்யில் முந்திரி 10, திராட்சை 10, மெலன் விதை சிறிது சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதையும் அல்வாவில் சேர்த்துவிடவும். கடைசியாக, அரைத்து வைத்த பொடியை தூவி கிண்டி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான அசோகா அல்வா தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.