அல்டிமேட் டேஸ்டில் தேங்காய்ப்பால் அல்வா- கேரளா ஸ்டைல் ஒரட்டி செய்யலாம் வாங்க!

coconut milk halwa
coconut milk halwa and kerala special orratiImage Credits: 6etreats|Indigo
Published on

‘அல்வா’ அரேபிய நாட்டில் தோன்றி பெர்ஷியா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த இனிப்பாகும். இன்று தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான இனிப்பு வகையாக அல்வா இருக்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அல்வாவை தேங்காய்ப்பால் பயன்படுத்தி சுலபமாக எப்படி செய்யலாம்ன்னு பாக்கலாம் வாங்க.

தேங்காய்ப்பால் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

தேங்காய்-1

சக்கரை-1கப்.

ஏலக்காய்-சிறிதளவு.

நெய்- தேவையான அளவு.

அவல்- ¾ கப்.

தேங்காய்ப்பால் அல்வா செய்முறை விளக்கம்:

முதலில் தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி அதை மிக்ஸியில் போட்டு அத்துடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும். இப்போது வடிக்கட்டி தேங்காய்ப்பாலை எடுத்து வைத்துவிடலாம்.

இப்போது 3/4கப் அவலை பொடியாக மிக்ஸியில் போட்டு அரைத்து அதை தேங்காய்ப்பாலில் சேர்த்து ஊறவிடவும். இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து 1கப் வெல்லம் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்றாக வெல்லம் கரையும் வரை கொதிக்கவிட்டு வடிக்கட்டி வைத்துவிடவும்.

இப்போது ஒரு ஃபேனில் தேங்காய்ப்பால் அவல் ஊற வைத்ததும், வடிக்கட்டி வைத்த வெல்லத்தையும் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிண்டவும். இப்போது சிறிது நெய் விட்டு அத்துடன் ஏலக்காய்த்தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கிண்டி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தேங்காய்ப்பால் அல்வா தயார். நீங்களும் வீட்டில் முயற்சித்து பார்த்துட்டு சொல்லுங்க.

கேரளா ஸ்பெஷல் ஒரட்டி செய்ய தேவையான பொருட்கள்;

துருவிய தேங்காய்-1கப்.

அரிசி மாவு-1 கப்.

தண்ணீர்- தேவையான அளவு.

உப்பு- 1 சிட்டிகை.

இதையும் படியுங்கள்:
மொறு மொறு ஜவ்வரிசி வடை- நேந்திரம்பழ அல்வா செய்யலாம் வாங்க!
coconut milk halwa

கேரளா ஸ்பெஷல் ஒரட்டி செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய் 1கப் தண்ணீர் சிறிது சேர்த்து கலந்துக் கொண்டு அத்துடன் உப்பு 1 சிட்டிகை சேர்த்து விட்டு அரிசி மாவு 1 கப் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும். இதை 30 நிமிடம் ஊற வைத்து விட்டு மாவை சிறிது சிறிதாக எடுத்து வாழையிலையில் தட்டி தோசைக்கல்லில் போட்டு நன்றாக இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். இப்போது சுவையான ஒரட்டி தயார். ஒரட்டி கேரளாவில் மிகவும் பிரபலமான உணவு வகையாகும். அங்கே இதை காலை உணவாக எடுத்துக்கொள்வார்கள். நான் வெஜ் கிரேவியோடு இதை சேர்த்து சாப்பிடுவார்கள். இந்த சுவையான கேரளா ஸ்டைல் ஒரட்டியை நீங்களும் வீட்டில் ஒருமுறை டிரை பண்ணி பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com