கர்நாடகா ஸ்டைல் மாங்காய் சாதம் செய்யலாம் வாங்க!

karnataka mango rice
karnataka mango rice
Published on

நம்ம ஊர்ல variety rice-க்கு எப்பவுமே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கு. அதுலயும் இந்த புளி சாதம், எலுமிச்சை சாதம் மாதிரியே, மாங்காய் சாதமும் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். குறிப்பா கர்நாடகால இந்த மாங்காய் சாதம் ரொம்ப ஃபேமஸ். பச்சை மாங்காயோட புளிப்பும், மசாலாவோட மணமும் சேர்ந்து ஒரு அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும். செய்யறதும் ரொம்ப ஈஸி. வாங்க, கர்நாடகா ஸ்டைல் மாங்காய் சாதம் எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • சமைச்ச சாதம் - 2 கப்

  • பச்சை மாங்காய் - 1

  • நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • கடுகு - 1 டீஸ்பூன்

  • உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

  • கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

  • வேர்க்கடலை அல்லது முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்

  • பச்சை மிளகாய் - 3-4

  • இஞ்சி - ஒரு சின்ன துண்டு

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

  • பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • கொத்தமல்லி இலை - கொஞ்சம்

செய்முறை:

முதல்ல சாதத்தை நல்லா உதிரி உதிரியா சமைச்சு ஆற வச்சுக்கோங்க. மாங்காய தோலை சீவி துருவி வச்சுக்கோங்க.

இப்போ ஒரு கடாய அடுப்புல வச்சு நல்லெண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க. எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு பொரிய விடுங்க. கடுகு பொரிஞ்சதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை/முந்திரி பருப்பு சேர்த்து பருப்பு சிவக்குற வரைக்கும் பொரிங்க.

பருப்பு சிவந்ததும், கீறின பச்சை மிளகாய், நறுக்கின இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு நிமிஷம் வதக்குங்க.

இப்போ மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கலந்து விட்டுட்டு, துருவி வச்ச மாங்காயை சேருங்க. தேவையான அளவு உப்பையும் இதுலயே சேர்த்து, மாங்காயோட பச்சை வாசனை போற வரைக்கும், மாங்காய் கொஞ்சம் சாஃப்ட் ஆகுற வரைக்கும் ஒரு மூணு நாலு நிமிஷம் வதக்குங்க.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசி இட்லி - தேங்காய் மாங்காய் துவையல் ரெசிபிஸ்!
karnataka mango rice

மாங்காய் நல்லா வதங்கினதும், அடுப்பை சிம்ல வச்சுட்டு, ஆற வச்ச சாதத்தை கடாயில சேருங்க. மாங்காயும் மசாலாவும் சாதத்தோட நல்லா கலக்குற மாதிரி மெதுவா கிளறுங்க. சாதம் உடையாம பார்த்துக்கோங்க. எல்லா சாதத்துலயும் மாங்காய் மசாலா சேர்ந்ததும், அடுப்பை அணைச்சிடுங்க.

கடைசியா நறுக்கின கொத்தமல்லி இலை தூவி ஒரு முறை கலந்து பரிமாறுங்க. மாங்காய் புளிப்பு கம்மியா இருந்தா, பரிமாறும் போது லேசா எலுமிச்சை சாறு பிழிஞ்சுக்கலாம்.

அவ்வளவு தான் சூப்பரான, புளிப்பு காரத்தோட கர்நாடகா ஸ்டைல் மாங்காய் சாதம் ரெடி. இது லஞ்ச் பாக்ஸ்க்கு இல்லன்னா சட்டுனு செய்யற டிபனுக்கு ஒரு அருமையான சாய்ஸ். மாங்காய் சீசன்ல கண்டிப்பா இந்த சாதத்தை செஞ்சு பார்த்து அசத்துங்க. இதோட டேஸ்ட் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன்.

இதையும் படியுங்கள்:
புளிப்பு மாங்காய் வடை தந்த அடையாளம்...
karnataka mango rice

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com