சத்தான வேர்க்கடலை சுண்டல் - Bread Egg Puff செய்யலாம் வாங்க!

சத்தான வேர்க்கடலை சுண்டல் - Bread Egg Puff செய்யலாம் வாங்க!
நான்சி மலர்

கொங்கு பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் பட்டதாரியான நான்சி மலர், கோரா (Quora) வாயிலாக எழுத்துலகில் காலடி வைத்து சுவாரசியமாக எழுதக் கற்றவர். கல்கி ஆன்லைன் ஊடகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிப்பீடு, சமூக வலைதளம், எடிட்டிங் மற்றும் எழுத்துப்பணியில் நிபுணத்துவம் பெற்றவர். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, பயணம், சுற்றுச்சூழல் குறித்த இவரது கட்டுரைகளும் கல்கியில் வெளியான சிறுகதைகளும் வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளன.

Updated on: 

இன்னைக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸான வேர்க்கடலை சுண்டல் மற்றும் பிரட் முட்டை பஃப்ஸ் ஆகியவற்றை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

வேர்க்கடலை சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை-1கப்.

நல்லெண்ணை- தேவையான அளவு.

முழு மல்லி-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-4

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்- சிறிதளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

தேங்காய் துருவல்- தேவையான அளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

வேர்க்கடலை சுண்டல் செய்முறை விளக்கம்:

முதலில் 1 கப் பச்சை வேர்க்கடலையை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு கடலை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது இதை அப்படியே குக்கரில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 4 விசில் விட்டு வேகவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணை விட்டு முழு மல்லி 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2 சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும். இப்போது இதை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு ஃபேனில் நல்லெண்ணை சிறிது சேர்த்து கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, பெருங்காயத்தூள் சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து அத்துடன் வேக வைத்த வேர்க்கடலையை சேர்த்து 1 நிமிடம் நன்றாக கிளறிவிட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலா பவுடரையும் இத்துடன் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக தேவையான அளவு தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கிண்டிவிட்டு இறக்கவும். அவ்வளவு தான். ஆரோக்கியமான வேர்க்கடலை சுண்டல் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லவும்.

பிரட் முட்டை பஃப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்;

வேகவைத்த முட்டை-3

வெங்காயம்-1

மிளகாய்தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.

ஜீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

பிரட்- தேவையான அளவு.

முட்டை-1

மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.

பிரட்கிரம்ஸ்- தேவையான அளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
குருபூர்ணிமா ஸ்பெஷல் கடா பிரசாதம் மற்றும் மோர் களி செய்யலாம் வாங்க!
சத்தான வேர்க்கடலை சுண்டல் - Bread Egg Puff செய்யலாம் வாங்க!

பிரட் முட்டை பப்ஸ் செய்முறை விளக்கம்;

முதலில் 3 முட்டையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, ½ தேக்கரண்டி கரம் மசாலா, ½ தேக்கரண்டி ஜீரகத்தூள், ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து அதை நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது வெந்த முட்டையை கட் பண்ணி வைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் முட்டை ஒன்றை உடைத்து அத்துடன் மிளகுத்தூள் 1 தேக்கரண்டி சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும் இப்போது பிரட்டை எடுத்து அதை ரவுண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். அதன் மீது செய்து வைத்திருக்கும் வெங்காயம், முட்டையை வைத்து மேலே இன்னொரு பிரட் துண்டை வைத்து மூடி முட்டை கலவையிலே முக்கி கடைசியாக பிரட் கிரம்ஸ்ஸில் நன்றாக பிரட்டி எடுத்து எண்ணெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான். சுவையான பிரட் முட்டை பஃப்ஸ் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.