சூப்பரான உருளை பெப்பர் ரோஸ்ட் - கத்திரிக்காய் ஊறுகாய் செய்யலாம் வாங்க!

Let's make Potato Pepper Roast-Eggplant Pickles!
Healthy Recipes
Published on

ன்றைக்கு சுவையான உருளை பெப்பர் ரோஸ்ட் மற்றும் கத்தரிக்காய் ஊறுகாய் ரெசிபிஸ் எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்னு பார்ப்போம்.

உருளை பெப்பர் ரோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்.

பொடி அரைக்க,

உளுந்து-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

தனியா-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-4

மிளகு-1 தேக்கரண்டி.

தாளிப்பதற்கு,

எண்ணெய்-தேவையான அளவு.

கடுகு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

பெருங்காயத்தூள்- சிறிதளவு.

கருவேப்பிலை- சிறிதளவு.

சின்ன உருளை-10

கொத்தமல்லி-சிறிதளவு.

உருளை பெப்பர் ரோஸ்ட் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, தனியா 1 தேக்கரண்டி, வரமிளகாய் 4, மிளகு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வறுத்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

இப்போது ஃபேனில் எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கிய பிறகு வேக வைத்த உருளையை சேர்த்து வதக்கிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு அத்துடன் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து கிளறிவிட்டு கடைசியாக கொத்தமல்லி தூவி  இறக்கினால் டேஸ்டியான உருளை பெப்பர் ரோஸ்ட் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கத்தரிக்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்.

பொடி அரைக்க,

தனியா-2 தேக்கரண்டி.

வெந்தயம்-1/2 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-10

பெருங்காயம்-சின்ன துண்டு.

நல்லெண்ணெய்-தேவையான அளவு.

கத்தரிக்காய்-10

வெந்தயம்-1/2 தேக்கரண்டி.

கடுகு-1/2 தேக்கரண்டி.

பூண்டு-10

கருவேப்பிலை-சிறிதளவு.

கல் உப்பு-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

புளி- எழுமிச்சை அளவு.

இதையும் படியுங்கள்:
சுவையான வெற்றிலை சாதமும், முருங்கைக்கீரை முட்டை பொரியலும் செய்யலாமா?
Let's make Potato Pepper Roast-Eggplant Pickles!

கத்தரிக்காய் ஊறுகாய் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் 2 தேக்கரண்டி தனியா, ½ தேக்கரண்டி வெந்தயம், 1 தேக்கரண்டி கடுகு, சின்ன துண்டு கட்டி பெருங்காயம், வரமிளகாய் 10 சேர்த்து வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து 10 கத்தரிக்காயை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது மறுபடியும் ஒரு கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது இதில் ½ தேக்கரண்டி வெந்தயம், ½ தேக்கரண்டி கடுகு, 10 பூண்டு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கிவிட்டு வதக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய், 1 வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

இப்போது இதில் 1 தேக்கரண்டி கல் உப்பு, ½ தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து இத்துடன் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ளவும். அடுத்து எழுமிச்சை அளவு புளியை தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

இது நன்றாக கொதித்து சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து பயன்படுத்தவும். அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் ஊறுகாய் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com