சூப்பர் டேஸ்ட்டில் 'கிரீம் பன்' மற்றும் 'சப்பாத்தி நூடுல்ஸ்' செய்யலாம் வாங்க!

Cream bun
Cream bun and Chappathi noodles RecipesImage credits: Mattia Pascal

துவரை பேக்கரியில் எத்தனையோ முறை கிரீம் பன் வாங்கி சாப்பிட்டிருப்போம். மிருதுவான பன்னும் உள்ளே கிரீமும் வைத்து சுவையாக இருக்கும். அத்தகைய டேஸ்ட்டான, எல்லோருடைய ஃபேவரைட்டான  கிரீம் பன் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்யலாம் வாங்க.

கிரீம் பன் செய்ய தேவையான பொருட்கள்;

மைதா -2கப்.

பொடியாக அரைத்த சக்கரை-1கப்.

உப்பு-1 சிட்டிகை.

பேக்கிங் பவுடர்- சிறிதளவு.

தயிர்-1கப்.

பட்டர்- சிறிதளவு.

கிரீம் செய்ய,

சோளமாவு-1கப்.

சக்கரை-1கப்.

பால்-1கப்.

வெண்ணிலா எசென்ஸ்-5 சொட்டுகள்.

குங்குமப்பூ- சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

கிரீம் பன் செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பவுலில் 2 கப் மைதா, பொடி செய்த சக்கரை 1கப், உப்பு 1 சிட்டிகை, பேக்கிங் பவுடர் சிறிதளவு இத்துடன் தயிர் 1 கப், பட்டர் சிறிதளவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பால் சிறிது சேர்த்து நன்றாக சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளவும். இந்த மாவை 30 நிமிடம் நன்றாக ஊறவிடவும்.

இப்போது ஒரு ஃபேனில் சோளமாவு 1 கப், சக்கரை 1கப், பால் 1 கப் சேர்த்து நன்றாக கலந்து விடவும். வெண்ணிலா  எசென்ஸ் 5 சொட்டு விடவும். இத்துடன் நிறத்திற்காக குங்குமப்பூ சேர்க்கவும். இப்போது இது கெட்டியாக தொடங்கியதும் பட்டர் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது இதை ஒரு பவுலில் மாற்றி மூடி வைக்கவும்.

இப்போது ஊறவைத்த மாவை சற்று தடிமனாக தேய்த்து விட்டு டம்ளரை வைத்து மாவில் அழுத்தி எடுத்து வைத்து கொள்ளவும். இப்போது எண்ணெய்யை நன்றாக கொதிக்கவிட்டு லோ பிளேமில் வைத்து மாவை போட்டு இருபக்கமும் பொன்னிறமாக ஆகும்வரை பன்னை பொரித்து எடுக்கவும். இப்போது பொரித்து வைத்திருக்கும் பன்னை நடுவிலே வெட்டி செய்து வைத்திருக்கும் கிரீமை தடவி பரிமாறவும். சுவையான கிரீம் பன் தயார். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். இதை நீங்களும் வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

சப்பாத்தி நூடுல்ஸ் செய்ய தேவையான பொருள்:

சப்பாத்தி-2

பட்டை, கிராம்பு- சிறிதளவு.

வெங்காயம்-1

தக்காளி-1

முட்டை-2

இஞ்சு பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

மல்லித்தூள்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
சுவையான இனிப்பு சீடையும், முட்டை காளானும் செய்யலாம் வாங்க!
Cream bun

சப்பாத்தி நூடுல்ஸ் செய்முறை விளக்கம்;

முதலில் இரண்டு சப்பாத்தியை எடுத்து உருட்டி சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சிறிது ஊற்றி பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, சிறிதாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது மல்லித்தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கிண்டி விடவும். இப்போது இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி கிண்டவும். அத்துடன் வெட்டி வைத்திருக்கும் சப்பாத்தியை சேர்த்து நன்றாக கிண்டி இறக்கினால் சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் தயார். நீங்களும் ஒருமுறை வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com