சுவையான ‘உளுந்து புட்டு இட்லி’ - ‘வாழைக்காய் கோலா உருண்டை’ செய்யலாம் வாங்க!

உளுந்து புட்டு இட்லி...
உளுந்து புட்டு இட்லி...
Published on

ன்றைக்கு நம்ம ஆவியில் வேகவைத்து செய்ய கூடிய ஒருவகை உணவும், எண்ணெய்யில் பொரித்த ஒரு உணவு வகையையும் பற்றி தெரிஞ்சிக்கலாம். இது இரண்டையுமே ரொம்ப ஈஸியா செஞ்சிடலாம். குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம். சரி வாங்க, எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

உளுந்து புட்டு இட்லி செய்ய தேவையான பொருள்:

உளுந்து-1 கப்.

நாட்டுச்சக்கரை-1 கப்.

ஏலக்காய்-1 தேக்கரண்டி.

சுக்கு பொடி-1 தேக்கரண்டி.

உப்பு-1 சிட்டிகை.

பொட்டுக்கடலை- சிளிதளவு.

சின்னதாக வெட்டிய தேங்காய்- சிறிதளவு.

உளுந்து புட்டு இட்லி செய்முறை விளக்கம்:

முதலில் 1கப் உளுத்தம் பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் நன்றாக ஊற வைத்து அரைத்து கொள்ளவும். பிறகு அதில் 1 கப் நாட்டுச்சக்கரை சேர்த்து மாவை பாத்திரத்தில் மாற்றி வைத்து விடவும். மாவு 8 மணி நேரம் நன்றாக புளிக்கட்டும்.

இப்போது இதனுடன் தட்டி வைத்த சுக்கு, ஏலக்காய் பொடி, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்போது இட்லி பாத்திரத்தில் சின்ன சின்னதாக வெட்டிய தேங்காய், பொட்டுக்கடலை வைத்து விட்டு மாவை அதன் மீது ஊற்றவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் நன்றாக கொதித்ததும் மாவை உள்ளே வைத்து 10 நிமிடம் நன்றாக வேக விடவும். இட்லி மாதிரியே மென்மையாகவும், டேஸ்ட்டும் அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.

வாழைக்காய் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:

வாழைக்காய்-1

சின்ன வெங்காயம்-10

பூண்டு-4 பல்.

காஞ்ச மிளகாய்-3

பச்சை மிளகாய்-2

கருவேப்பிலை- சிறிதளவு.

பொட்டுக்கடலை-சிறிதளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

பெருஞ்சீரகம்-1 தேக்கரண்டி.

தேங்காய்- சிறிதளவு.

வாழைக்காய் கோலா உருண்டை செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு வாழைக்காயை 4 துண்டுகளாக வெட்டி குக்கரில் 2 விசில் வைத்து நன்றாக வைகவைத்து எடுத்து கொள்ளவும். அதனுடைய தோலை எடுத்துவிட்டு வாழைக்காயை கையிலேயே மசித்து விட்டு கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் 2  தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து 10 சின்ன வெங்காயம், 4 பல் பூண்டு, 3 காஞ்ச மிளகாய், கொஞ்சமாய் பொட்டுக்கடலை, 2 பச்சை மிளகாய், கருவேப்பிலை கொஞ்சம், ¼  தேக்கண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம், கொஞ்சமாக தேங்காய் சேர்த்து நல்லா வதக்கி கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
வாழைப்பூ பொடி சாதம் வித் ஆலு பிந்தி சுக்கா செய்யலாம் வாங்க!
உளுந்து புட்டு இட்லி...

நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் போட்டு கொரகொரன்னு அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை வாழைக்காயுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்போது கையில் எண்ணெய் தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் இந்த உருண்டைகளை போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சூப்பர் டேஸ்டில் வாழைக்காய் கோலா உருண்டை தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை டிரை பண்ணி பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com