மொறுமொறு மதுரை ஸ்பெஷல்... முள்ளு முருங்கை கீரை வடை ரெசிபி!

குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான மதுரை ஸ்டைல் மூலிகை வடை வீட்டிலேயே செய்யும் எளிய முறை.
முள்ளு முருங்கை
முள்ளு முருங்கைGemini image
ஆ.நர்மதா

வணக்கம்! என்னுடைய பெயர் ஆ.நர்மதா. நான் ஒரு முதுநிலை வேதியியல் பட்டதாரி. விருதுநகர் அருகில் இருக்கும் பாளையம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தமிழின் மீது இருந்த ஆர்வத்தினால் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுத கற்றுக் கொண்டேன்.இந்த சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் வீரியத்துடன் இருக்கும். இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னுடைய எழுத்தாற்றலை படைத்து வருகிறேன்.

Updated on

கீரையில் அதிக அளவு உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கீரை வகைகளில் அதிக அளவு இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கீரையை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. இது வயிற்றுவலி மற்றும் கர்ப்பப்பையில் உண்டாகும் ரத்தக் கட்டிகளை கரைக்க உதவுகிறது. கீரை தாய்ப்பால் சுரப்பிற்கும் உடல் எடை குறைப்பிற்கும் அதிகம் உதவுகிறது. இவ்வாறு கீரையில் பல நல்ல சத்துக்கள் இருந்தாலும் குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது.

கீரைகளை கூட்டு பொரியல் போல் செய்து கொடுப்பதைக் காட்டிலும் இவ்வாறு வடை செய்து கொடுப்பதால் அதனை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - தேவையான அளவு

புழுங்கல் அரிசி - 1 கப்

உளுந்தம் பருப்பு - அரை கப்

முள்ளு முருங்கை கீரை - 100 கிராம்

முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடிஅளவு

உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
சென்னை கார குழம்பு செய்யணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துப் பாருங்க!
முள்ளு முருங்கை

மிளகு - 2 ஸ்பூன்

சீரகம் - 2 ஸ்பூன்

பொறிகடலை - 3 ஸ்பூன்

கருவேப்பிலை - தேவையான அளவு

வரவத்தல் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை நன்கு கழுவி 2 மணி நேரங்கள் ஊறவைக்க வேண்டும். இவை நன்கு உரிய உடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு சுத்தம் செய்த முள்ளு முருங்கை கீரை, முருங்கை கீரை, உப்பு, மிளகு, சீரகம் தேவையான அளவு நீர் சேர்த்து மென்மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

முள்ளு முருங்கை
முள்ளு முருங்கைGemini image

இதனுடன் தேவையான அளவு பச்சரிசி மாவு கலந்து சப்பாத்தி பதம் வரும்வரை பிசைந்து பத்து நிமிடங்கள் அப்படியே விடவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு மிதமான வெப்பத்தில் இருக்கும் பொழுது நாம் பிசைந்து வைத்திருந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வடைக்கு தட்டுவதுபோல் தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் நன்கு பொரிந்து வரும் வரை வேகவைக்க வேண்டும். சுவையான ஆரோக்கிய மிக்க மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை கீரை வடை வீட்டிலேயே தயார்.

இதையும் படியுங்கள்:
டீ டைம் ஸ்பெஷல்: கிரிஸ்பியான பாரம்பரிய தட்டை செய்ய இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
முள்ளு முருங்கை

இந்த மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை கீரை வடை ரெசிபி மேல் போடப்படும் மசாலா செய்வதற்காக ஒரு வாணலியில் பொரிகடலை, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, வத்தல், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மிதமான வெப்பத்தில் வறுத்துக்கொள்ள வேண்டும். இவை நன்கு ஆரியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

முள்ளு முருங்கை கீரை வடையின் மீது இந்த பொடியை தூவி விட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம். ஸ்நாக்ஸ் ரெசிபிகளை கடைகளில் இருந்து வாங்கி கொடுப்பதைக் காட்டிலும் நாம் வீட்டிலேயே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுப்பது எந்தவித உடல் உபாதைகளையும் ஏற்படுத்தாமல் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

கீரையை ஒதுக்காமல் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், மதுரையின் பாரம்பரிய சுவையில் சத்தான மற்றும் மொறுமொறுப்பான மாலையின் ஸ்நாக்ஸ் தயார் செய்வதற்கான முழு வழிகாட்டுதலைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com