பிரியாணி பிரியரா நீங்க? இதை மிஸ் பண்ணாதீங்க! செய்வது ஈசி, சுவை அமோகம்!

Tasty Makhana Biryani recipe in tamil
Makhana Biryani
Published on

பொதுவாக எல்லோருக்குமே பிரியாணி என்றாலே உயிர், பெயரை கேட்ட உடனேயே நாவில் நீர் சுரக்கும். பிரியாணி பல வகைகளில் செய்யப்படுகிறது. வெஜ் பிரியாணி, பனீர் பிரியாணி, சோயா சங்க் பிரியாணி, காளான் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி என இப்படி பல விதங்களில் பிரியாணி செய்வதை கேட்டிருப்பீர்கள். மக்கானா பிரியாணியை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

ரொம்ப சுவையாக இருக்கும். அதே சமயத்தில் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமானது. எல்லாவற்றையும் விட இந்த மக்கானா பிரியாணி செய்வது மிக மிக சுலபம். ரொமாப சிம்பிள்தான். செய்வதற்கு பொருட்களும் அதிகமாக தேவைப் படாது. செலவும் குறைவு. செய்வதற்கு தேவையான நேரமும் ரொம்ப குறைவு.

மக்கானாவில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம்  போன்ற உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மக்கானா குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

மக்கானாவில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் எடையை குறைக்க நினைக்கிறவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம். இது எலும்புகளையும் வலுபடுத்த உதவும். ஆகவே தினமும் சிறிதளவு மக்கானா சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

தினமும் மக்கானாவில் சாலட் செய்தோ, அல்லது சப்பாத்தி செய்தோ சாப்பிடலாம். ஒரு மாற்றத்திற்காக  சில நேரங்களில் சுவையான பிரியாணி செய்தும் சாப்பிடலாம். சரி வாங்க பார்க்கலாம் பிரியாணி எப்படி செய்வது என்று…

இதையும் படியுங்கள்:
அறுசுவை சட்னிகள் செய்து அசத்துங்க! டேஸ்ட்டும் ஆரோக்கியமும் நிச்சயம்!
Tasty Makhana Biryani recipe in tamil

செய்முறை:

முதலில் 200g பாசுமதி அரிசியை கழுவி பத்து நிமிடத்திற்கு ஊறவைத்துக் கொள்ளவும்.

தண்ணீரை வடிகட்டிய பிறகு,  ஒரு  பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அரிசியை வேகவைக்கவும். வெந்த பிறகு அதிலிருக்கும் நீரை நன்றாக வடித்த பின் சாதத்தை ஆறவைக்கவும். ரைஸ் அதிகமாக குழையக் கூடாது. பிரியாணிக்கு ஏற்றவாறு நல்ல பொல பொல வென உதிர் உதிராக இருக்க வேண்டும்.

உங்களுக்கு டைரக்டாக வெடிப்பதில் கஷ்டம் இருந்தால் குக்கரில் ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் என்ற கணக்கில் தண்ணீரை ஊற்றி ஒரு விசில் விட்டு வேகவைக்கவும். ஓசை அடங்கிய பிறகு மெதுவாக வேற பாத்திரத்தில் மாற்றி ரைஸை ஆறவைக்கவும்.

அடுத்தபடியாக அடுப்பை மூட்டி வாணலியை வைத்து அதில் 15 – 20 மக்கானா துண்டுகளை போட்டு நன்றாக பொன்னிறத்தில் வறுக்கவும். பிறகு அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.

பிறகு அதே வாணலியில் மூன்று ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் சீரகத்தை போட்டு வெடிக்க விடவும். பின்பு,  பிரியாணி இலை மற்றும் நசுக்கிய பூண்டுகளை(5 அல்லது 6 பல்) போட்டு வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் (ஒரு பெரிய சைஸ் வெங்காயம்) மற்றும் நான்கைந்து பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி சேர்த்து கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக  மாறும் வரை வதக்கவும். இப்போது ½ ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் பிரியாணி மசாலாத் தூள் மற்றும் தேவையான உப்பையும் சேர்த்து வதக்கவும். வறுத்து வைத்துள்ள மக்கானாவையும் போட்டு நன்றாக கலந்து ஒரு இரண்டு நிமிடத்திற்கு வேகவைக்கவும்.

மக்கானாவை அதிக நேரம் வதக்க கூடாது. கடைசியாக ஆறவைத்துள்ள பாசுமதி ரைஸை போட்டு எல்லாம் நன்றாக ஒன்று சேருமாறு கலக்கவும். ஒரு நிமிடம் வதங்கினால் போதுமானது. இப்போது சிறிதளவு கசூரி மேத்தியை உள்ளங் கைகளிவ் தேயத்து பிறகு சாதத்தின் மேல் தூவி கலக்கவும். அடுப்பை அணைத்து விடவும்.  கொத்தமல்லி இழைகளை பொடியாக நறுக்கி மேலே தூவவும்.

இதையும் படியுங்கள்:
இந்த சின்ன டிப்ஸ் போதும்... உங்கள் சமையல் இனி வேற லெவல்!
Tasty Makhana Biryani recipe in tamil

அவ்வளவதாங்க...சூப்பரான மக்கானா பிரியாணி ரெடி.. இது கூட தொட்டு கொள்வதற்கு சிம்புளா ஒரு தயிர் பச்சடியோ அல்லது ஊறுகாயோ அல்லது அப்பளம் இருந்தால் கூட போதும்.

ட்ரை பண்ணி சாப்பிட்டு பிறகு கூறுங்கள் எப்படி இருக்கிறதென்று..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com