பலாக்கொட்டை சுக்கா செய்வது ரொம்ப ஈஸி!

பலாக்கொட்டை சுக்கா
பலாக்கொட்டை சுக்கா
Published on

பலாப்பழம் சாப்பிடும்போது அந்த பழத்தோட டேஸ்ட்ல மயங்கி, உள்ள இருக்குற கொட்டைய கவனிக்காம தூக்கி போட்டுடுவோம்ல? ஆனா அந்த பலாக்கொட்டையில எவ்வளவு சத்து இருக்கு தெரியுமா? அத வச்சு ஒரு சூப்பரான டிஷ் செஞ்சா, அதோட டேஸ்ட்ல நீங்க அசந்து போயிடுவீங்க. அப்படி ஒரு அட்டகாசமான ரெசிபி தான் இந்த பலாக்கொட்டை சுக்கா. வாங்க, இந்த சிம்பிளான சுக்காவை எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பலாக்கொட்டை - 1.5 கப்

  • சின்ன வெங்காயம் - 10-12

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

  • வரமிளகாய் - 2-3 

  • சோம்பு - அரை டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

  • மல்லித்தூள்- 1.5 டீஸ்பூன்

  • கரம் மசாலா - கால் டீஸ்பூன்

  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • தண்ணீர் - கால் கப்

செய்முறை:

பலாக்கொட்டைய முதல்ல நல்லா கழுவி குக்கர்ல போட்டு தேவையான அளவு தண்ணி, கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு மூணு நாலு விசில் வர வரைக்கும் வேக வச்சுக்கோங்க. 

வெந்ததும் தண்ணிய வடிகட்டிட்டு, சூடா இருக்கும்போதே கொட்டையோட மேல இருக்குற வெள்ளை தோலையும், உள்ள இருக்குற மெல்லிய பிரவுன் தோலையும் உறிச்சு எடுத்துடுங்க. அப்பதான் மசாலா நல்லா உள்ள இறங்கும்.

இப்போ ஒரு கடாய அடுப்புல வச்சு எண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க. எண்ணெய் சூடானதும் சோம்பு போட்டு பொரிய விடுங்க. கூடவே கிள்ளி வச்ச வரமிளகாய சேர்த்து லேசா வறுத்து எடுங்க.

அடுத்ததா பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்த சேர்த்து பொன்னிறமா வதக்குங்க. வெங்காயம் வதங்கினதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போற வரைக்கும் வதக்குங்க.

இப்போ மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து அடுப்பை சிம்ல வச்சு ஒரு நிமிஷம் வதக்குங்க. மசாலாவோட பச்சை வாசனை போகணும்.

இதையும் படியுங்கள்:
நட்சத்திர சோம்பு: ஆடம்பர தோற்றம் கொண்ட மணமூட்டும் மசாலா
பலாக்கொட்டை சுக்கா

மசாலா வதங்கினதும் நம்ம தோல் உறிச்சு வச்ச பலாக்கொட்டைய சேர்த்து மசாலாவோட நல்லா கலந்து விடுங்க. தேவையான அளவு உப்பு சேருங்க.

ஒரு கால் கப் தண்ணி, கறிவேப்பிலை சேர்த்து, கடாய மூடி வச்சு சிம்ல ஒரு பத்து நிமிஷம் வேக விடுங்க. தண்ணி வத்தி, மசாலா பலாக்கொட்டையோட நல்லா சேர்ந்து சுக்கா பதத்துக்கு வரணும். இடையில அப்பப்ப திறந்து கிளறி விடுங்க அடி பிடிக்காம இருக்க.

சத்தான, காரசாரமான பலாக்கொட்டை சுக்கா ரெடி. இத சூடான சாதத்தோட இல்லனா சப்பாத்தி, தோசை கூட வச்சு சாப்பிட்டா செம்ம டேஸ்டா இருக்கும். இனிமே பலாக்கொட்டைய தூக்கி போடாம இந்த மாதிரி சுக்கா செஞ்சு உங்க வீட்ல எல்லாரையும் அசத்துங்க. இதோட தனித்துவமான டேஸ்ட் கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன்.

இதையும் படியுங்கள்:
பூரி ஜெகன்னாதர் கோயில் மூன்றாவது படியில் உள்ள மர்மம்... கால் வைத்தால் போச்சு!
பலாக்கொட்டை சுக்கா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com