
உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் பூரி ஜெகன்னாதர் கோயில் முக்கியமான ஒன்றாகும். ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான மற்றும் புகழ் பெற்ற இந்தக் கோயில், நாட்டின் கலாச்சார அடையாளங்களில் முதன்மையான ஒன்றாக உள்ளது. இந்த கோயில் ஜெகந்நாதர் அல்லது ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ கிருஷ்ணரின் இந்த நகரம் ஜகந்நாதபுரி என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோயில் பல ஆச்சர்யங்கள் நிறைந்த அனுபவத்தைக் கொடுக்கும். கோயிலின் பல விஷயங்கள் மர்மங்களும் சுவாரஸ்யமும் நிறைந்ததாக உள்ளது. இந்தியாவில் கோயில்களுடன் தொடர்புடைய அற்புதங்கள் நிறைந்த பல தகவல்கள் உள்ளன. பூரி ஜெகந்நாதர் கோயிலில் பல சுவாரசியமான ரகசியங்கள் உள்ளன. இந்தக் கோயிலுடன் தொடர்புடைய பல மர்மங்களும் உள்ளன.
இந்தக் கோயிலின் மேல் எந்தப் பறவையும் பறப்பதில்லை. இந்தக் கோயிலின் நிழல் தரையில் விழாது. இந்தக் கோயிலின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ள கொடி எப்போதும் எதிர் திசையில் பறக்கும். இந்தக் கோயிலுக்குள் நுழையும் போது, கடல் அலைகளிலிருந்து வரும் சத்தம் கேட்காது.
இந்த ஆச்சரியங்கள் அனைவரும் அறிந்தது என்றாலும், அறியாத ஒன்று தான் இந்த கோவிலின் மூன்றாவது படியில் உள்ள மர்மம். இந்தக் கோயில் பூலோக வைகுந்தமாகக் கருதப்படுகிறது. ஆயினும் இந்தக் கோயிலின் மூன்றாவது படியில் கால் வைக்கக் கூடாது என்று ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
இந்து தொன்மவியல் படி பூரி ஜெகந்நாதரை தரிசனம் செய்த பிறகு, மக்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை பெறத் தொடங்கினர். இதனால் மக்கள் யாரும் மேலோகம் செல்லாமல் வைகுந்தம் நோக்கி சென்றனர்.
இதைக் கண்டு அதிருப்தி அடைந்த , மரணக் கடவுளான தர்மராஜன் ஜெகந்நாதரை சந்தித்து "பிரபோ, மக்கள் செய்த பாவத்திலிருந்து விடுதலை அடைய நீங்க எளிய தீர்வைக் கொடுத்து விட்டீர்கள். உங்களை தரிசனம் செய்து மக்கள் பாவங்களை போக்கிக் கொள்கிறார்கள்". இதனால் யாரும் பரலோகம் வருவதே இல்லை. மனிதர்கள் தங்கள் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிக்காமல் உங்களை தரிசித்து பாவம் போக்கி சொர்க்கம் செல்வது முறையல்ல" என்று கூறினார்.
தர்மராஜன் பேச்சைக் கேட்ட ஜெகந்நாதர், "தர்மராஜனே நீ கோயிலின் பிரதான நுழைவாயிலில் உள்ள மூன்றாவது படியில் இடத்தைப் பிடித்துக் கொள்.
பக்தர்கள் என்னைப் தரிசித்த பின் யார் நீ வசிக்கும் படியை மிதித்தாலும் உடனடியாக அவருடைய எல்லா புண்ணியங்களும் தீர்க்கப்பட்டு, அவர் யமலோகத்திற்குச் செல்வார்கள்" என்று உறுதி கூறினார். இதன் படி தர்மராஜா வசிக்கும் மூன்றாவது படியை யார் மிதிப்பார்கள்? தர்மராஜன் அவர்களை எதிர்காலத்தில் தன் ஆளுமை உலகிற்கு கொண்டு செல்லலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார். இதனால் பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு செல்லும் எவரும் அந்த மூன்றாவது படியை மிதிப்பதில்லை.
மூன்றாவது படி அமைந்துள்ள இடம்:
ஜெகந்நாதர் கோயிலில் பிரதான நுழைவாயிலிலிருந்து நுழையும் போது உள்ள இந்தப் படிக்கட்டு, கீழிருந்து மூன்றாவது படியாக அமைந்துள்ளது. கோயிலுக்குள் தரிசனம் செய்ய நுழையும் போது, இந்த படியில் கால் வைக்கலாம். ஆனால், தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது, அந்த 3-வது படியில் கால் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. பூரி ஜெகந்நாதர் கோவிலில் மொத்தம் 22 படிக்கட்டுகள் உள்ளன. தரிசனம் செய்த பிறகு, கீழே இருந்து தொடங்கும் மூன்றாவது படியை மனதில் கொண்டு அதில் உங்கள் கால்களை வைக்கக்கூடாது. இந்த படியை தனித்து காட்டுவதற்காக அதற்கு கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது.