Mayonnaise Banned: மயோனைஸ் பிரியர்களே!! கவலை வேண்டாம்… அதான் இது இருக்கே!!

Veg mayonnaise
Veg mayonnaise
Published on

தமிழ்நாட்டில் மயோனைஸ் தடை செய்யப்பட்டிருப்பதால், மயோனைஸை விரும்பி சாப்பிடுபவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கான சூப்பர் மயோனைஸ்தான் இது.

ஆம்! முட்டையின் வெள்ளைக் கருவுடன், வெஜிடபிள் ஆயில், வினிகர் சேர்த்து மயோனைஸ் தயாரிக்கப்படுகிறது. சான்ட்விச், ஷவர்மா மற்றும் பர்கர் போன்ற உணவுப் பொருட்களில் மயோனைஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த மயோனைஸ் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

சால்மோனெல்லா டைபிமிரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி தடை செய்யப்பட்டுள்ளது.

மீறி மயோனைஸ் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதித்தல், உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இப்படியான நிலையில், மயோனைஸ் விரும்பிகளுக்காக தற்போது ட்ரெண்டாகும் ஒன்றுதான் வெஜ் மயோனைஸ். அதாவது முட்டை சேர்க்காமல் செய்யப்படும் மயோனைஸ்.

வெஜ் மயோனைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

  • 1/2 கப் பால் (குளிர்ந்தது)

  • 1/2 கப் ஆலிவ் எண்ணெய்

  • 1/2 தேக்கரண்டி சர்க்கரை

  • 1/2 தேக்கரண்டி உப்பு

  • 1/2 தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள் (விரும்பினால்)

  • 1 தேக்கரண்டி வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சைடர் வினிகர்

  • 2 பல் பூண்டு தட்டியது

செய்முறை:

1.  மிக்ஸியில் குளிர்ந்த பால், சர்க்கரை, உப்பு, பூண்டு மற்றும் வெள்ளை மிளகு தூள் சேர்க்கவும்.

2.  குறைந்த வேகத்தில் பிளெண்ட் செய்யவும், பின்னர் படிப்படியாக அதிக வேகத்திற்கு அதிகரிக்கவும்.

3.  பிளெண்டர் இயங்கும் போது, எண்ணெயை மெதுவாக ஒரு மெல்லிய அளவு ஊற்றவும். கலவை கெட்டியாகி மயோனைஸ் போன்ற நிலைத்தன்மையை அடையும் வரை பிளெண்ட் செய்யவும்.

4.  வினிகரைச் சேர்த்து மேலும் சில விநாடிகள் பிளெண்ட் செய்யவும்.

5.  சுவைப் பார்த்து, தேவைப்பட்டால் உப்பு அல்லது வினிகரைச் சேர்க்கவும்.

6.  தயாரான வெஜ் மயோனைஸை ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

குறிப்புகள்:

  • பால் மற்றும் எண்ணெய் இரண்டும் குளிர்ச்சியாக இருப்பது முக்கியம், அப்போதுதான் மயோனைஸ் சரியாக கெட்டியாகும்.

  • எண்ணெயை மிக மெதுவாக ஊற்றுவது மயோனைஸின் சரியான நிலைத்தன்மைக்கு முக்கியம்.

  • சுவைக்காக பூண்டு தூள், மிளகுத்தூள் அல்லது மூலிகைகள் போன்றவற்றைச் சேர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
சமையல் என்பது அலாதியான கலை! சமைக்க விருப்பமா? வாங்க சமைக்கலாம்!
Veg mayonnaise

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com