குளிருக்கு "சுருக்"குனு ருசிக்க மீல்மேக்கர் உணவுகள்..!

healthy snacks for winter
healthy snacks
Published on

சோயா உருண்டைகள் எனப்படும் மீல்மேக்கர் பலர் வீடுகளில் நிச்சயம் இருக்கும். காரணம் திடீர் விருந்தினர்கள் வந்தாலும் அல்லது வேறு ஏதும் சாப்பிட வேண்டும் போல் இருந்தாலும் இந்த மீல்மேக்கர் உருண்டைகள் சட்டென கை கொடுக்கும். மரக்கறி உணவை சேர்ந்த இது அசைவ உணவுபோல் ருசியை தருவதும் சிறப்பு. இந்த மழை நேரத்துக்கு இந்த மீல் மேக்கர் உருண்டைகளை வைத்து சுருக்கென்ற சில ரெசிபிகளை பார்ப்போம்.

மீல் மேக்கர் கறி பொடிமாஸ்
தேவை:

மீல் மேக்கர் (பெரிய உருண்டை)- 1 பாக்கெட்
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 2
இஞ்சி - ஒரு அங்குலம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் -4
மிளகு - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
சோம்பு -  1 டீஸ்பூன்
கருவேப்பிலை - தேவைக்கு

செய்முறை:

பெரிய மீல்மேக்கர் உருண்டைகளை சுடுநீரில் போட்டு இரண்டு மூன்று முறை நன்கு அலசி பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் ஒரு சுழற்று மட்டும் சுற்றி எடுத்து வைக்கவும். அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய கடுகு, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.  இத்துடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் மீல் மேக்கரை போட்டு நன்கு வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான அன்னவரம் பிரசாதம் - அவரைக்காய் பருப்பு உசிலி செய்யலாம் வாங்க!
healthy snacks for winter

மற்றொரு வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, சோம்பு, மிளகு, வற்றல் இவற்றை வறுத்து பொடி செய்து வைக்கவும். இப்போது வதங்கி கொண்டிருக்கும் மீல் மேக்கரில் இந்த பொடியை போட்டு  சிறு தீயில் ஒரு பத்து நிமிடம் மூடி வதக்கி தேவைப்பட்டால் சிறிது தேங்காய் பூ போட்டு எடுக்கலாம் அல்லது மேலே கருவேப்பிலை போட்டு இறக்கி இது தயிர் சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு தொட்டுக் கொள்ள சூப்பர் சைடிஷ் ரெடி.

மீல் மேக்கர் கட்லெட்
தேவை:

மீல்மேக்கர் - 1 பாக்கெட்
மிளகாய் தூள்-  2 டீஸ்பூன்
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி - சிறிது
பெரிய வெங்காயம் - 5
பட்டை  கிராம்பு தூள் செய்தது - 1 டீஸ்பூன்
முட்டை -இரண்டு
உருளைக்கிழங்கு-  3
எண்ணெய் -  தேவைக்கு
உப்பு- தேவைக்கு
எலுமிச்சம் பழம் -அரை மூடி
ரஸ்க் – தேவைக்கு

செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து  உதிர்த்து வைக்கவும் மீல்மேக்கரையும் சுடுதண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்து மிக்சியில் அரைத்து எடுக்கவும். இதில் மிளகாய்த்தூள், கறி மசால் தூள், தேவையான உப்பு, மிளகாய்த்தூள், மசித்த உருளைக்கிழங்கை கலக்கவும். ஒரு கரண்டி எண்ணெயில்   பொடியாக நறுக்கிய  வெங்காயம் இஞ்சி பூண்டு விழுதை வதக்கி அதையும் இந்த மீல் மேக்கருடன் சேர்த்து நன்கு பிசைந்து சிறிது விருப்பமான வடிவத்தில் தட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வெரைட்டியான வெஜ் இடியாப்பமும், நரிப் பயறு கட்லெட்டும்!
healthy snacks for winter

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மைதா மாவு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள்,  உப்பு தூள் சிறிது போட்டு நன்றாக அடித்து வைக்கவும். அதேபோல் ரஸ்க்கை தூள் செய்து ஒரு தட்டில் வைக்கவும்.  தயார் செய்து வைத்திருக்கும் கட்லட்டை முட்டையில் துவைத்து ரஸ்கில் புரட்டி  எடுத்து காய்ந்த தோசை சட்டியில் போட்டு சுற்றி சிறிது நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் ஓகே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com