
வெறுமனே இடியாப்பம் தேங்காய் பால் என்று செய்து கொடுத்தால் அதை சாப்பிடாமல் போகிறவர்கள் இருக்கவே செய்வார்கள். அதையே காய்கறிகள் கலந்து வெரைட்டியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர். கார்போஹைட்ரேட்டுடன் சேர்ந்து சத்துக்களும் நிறைய கிடைக்கும். வெஜ் இடியாப்பம் செய்முறை பற்றி இதோ:
இடியாப்ப மாவு- மூன்று கப்
வேகவைத்த பச்சை பட்டாணி- அரை கப்
வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு -ஒன்று
பொடியாக அரிந்த கேரட், பீன்ஸ் எல்லாம் சேர்த்து- ஒரு கப்
பொடியாக அறிந்த கேப்ஸிகம்- ஒன்று
பொடியாக அரிந்த பெரிய வெங்காயம்- 2
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்- 4
மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் -1 டீஸ்பூன்
சாம்பார் பொடி- 2 டீஸ்பூன்
நெய்- 2 டீஸ்பூன்
பொடியாக அரிந்த மல்லித்தழை- ரெண்டு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு ஆர்க்கு
உப்பு எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
இடியாப்ப மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், உப்பு, கொதிக்க வைத்த நீர் சேர்த்து கரண்டியின் பின்புறத்தால் கிளறிவிடவும். அதை இடியாப்ப உரலில் போட்டு பிழிந்து, வேகவைத்து, இடியாப்பமாக செய்து ஆறவைத்து உதிர்த்து வைக்கவும்.
ஒரு அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் அரிந்த காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கி வரும் பொழுது வேகவைத்த பச்சை பட்டாணி, நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு, மசாலா பொடிகள், மற்றும் உப்பு, நெய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி வேகவிட்டு அதனுடன் உதிர்த்து வைத்திருக்கும் இடியாப்பத்தையும் போட்டு கிளறிவிட்டு மல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
இதற்கு தனியாக வேறு சட்னி சாம்பார், தேவை இல்லை. இதில் அதிகமாக நெய், எண்ணெய் போன்றவை சேர்த்திருப்பதால் சாப்பிடும் பொழுது விக்காமலும் இருக்கும். தேவைப்பட்டால் விருப்பப்பட்ட சட்னியோடு சாப்பிடலாம்.
நரிப்பயிறு கட்லட்:
செய்ய தேவையான பொருட்கள்:
ஊறவைத்து வேகவைத்த நரிப் பயறு -அரை கப்
உடைத்த ஓட்ஸ்-கால் கப்
கேரட் துருவல்- கால் கப்
பச்சை மிளகாய் நறுக்கியது- மூன்று
மிளகாய்த் தூள், சாட் மசாலா தலா- ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்
தயிர் -2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் -அரை டீஸ்பூன்
உப்பு ,எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
வேகவைத்த நரி பயிரை லேசாக மசித்துக்கொண்டு அனைத்துப் பொருட்களையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அந்த கலவையில் கட்லெட் போல செய்து சூடான தவாவில் போட்டு ஓரங்களில் எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். வித்தியாசமான ருசியுடன் அசத்தலாக இருக்கும். அப்படியே சாப்பிடலாம். நரி பயரில் கிரேவி, குழம்பு, சுண்டல் போன்ற வகைகளை செய்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.