சுவை மட்டுமல்ல, மருந்தும் தான்: இந்தியப் பாரம்பரிய ஊறுகாய்களின் மருத்துவப் பயன்கள்!

Not only is it delicious, it's also medicine.
Medicinal benefits of pickles
Published on

ந்தியாவில் ஊறுகாய் (அச்சாறு) என்பது வெறும் சுவைச் சேர்க்கும் உணவாக மட்டுமல்ல, மருத்துவ பயன்களும் கொண்ட ஒரு பாரம்பரிய உணவு. ஆயுர்வேதம் மற்றும் பழமையான சமையல் முறைகளில் இதற்கான சான்றுகள் உள்ளன. இப்போது பண்டைய இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சில ஊறுகாய்களையும் அவற்றின் மருத்துவ நன்மைகளையும்  பார்ப்போம்:

1.மாங்காய் ஊறுகாய் (Mango Pickle): பண்டைய காலம் முதல் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஊறுகாய். சங்க இலக்கியங்களில் கூட மாங்காய் பற்றிய குறிப்புகள் உள்ளன.

செய்முறை: பச்சை மாங்காய் துண்டுகளை உப்பு, மிளகாய், கடுகு, வெந்தயம், நல்லெண்ணெய் (எள்ளெண்ணெய்) சேர்த்து ஊறவைப்பர்.

மருத்துவ பயன்கள்:  செரிமானத்தை மேம்படுத்தும், வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும், பசியை தூண்டும், வெப்பத்தை தணித்து, கோடையில் உடலுக்கு சக்தி தரும். வைட்டமின் C நிறைந்ததால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

2.எலுமிச்சை ஊறுகாய் (Lemon Pickle)

செய்முறை: எலுமிச்சையை துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய், மஞ்சள், இஞ்சி, வெந்தயம், சில இடங்களில் சர்க்கரை சேர்த்து வைப்பர்.

மருத்துவ பயன்கள்: எலுமிச்சையில் உள்ள Vitamin C உடல் சோர்வு, காய்ச்சல், சளி, இருமலைத் தடுக்கும். செரிமான சாறுகளை தூண்டி, ஜீரணக்கோளாறுகளை சரிசெய்யும். இரத்தத்தை சுத்தம் செய்யும். வயிற்றுப்போக்கு, வாந்தி, அளர்ச்சி ஆகியவற்றை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
சமையலறையில் ஸ்மார்ட்டாக சமைக்க எளிய குறிப்புகள்!
Not only is it delicious, it's also medicine.

3.இஞ்சி ஊறுகாய் (Ginger Pickle)

செய்முறை: இஞ்சி துண்டுகளை வெட்டி எலுமிச்சைச்சாறு, உப்பு, சில நேரங்களில் தேன் அல்லது வெங்காயம் சேர்த்து ஊறவைப்பர்.

மருத்துவ பயன்கள்: ஆயுர்வேதத்தில் இஞ்சி “மருந்தின் மன்னன்” என அழைக்கப்படுகிறது. குளிர், இருமல், சளி குறைக்கும். மூட்டு வலி, காற்று வாதம் (Arthritis) குறைக்கும். பசியை தூண்டும், வயிற்றுப் புண் மற்றும் அஜீரணத்தைக் குணப்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

4.பூண்டு ஊறுகாய் (Garlic Pickle)

செய்முறை: பூண்டு பற்களை சுத்தம் செய்து உப்பு, மிளகாய், கடுகு, வெந்தயம், எள்ளெண்ணெய் சேர்த்து ஊறவைப்பர்.

மருத்துவ பயன்கள்: இரத்த அழுத்தம், கொழுப்பு அளவை கட்டுப்படுத்தும். இதய நோய்களைத் தடுக்கும். பூண்டில் உள்ள அலிசின் (Allicin) என்ற வேதிப்பொருள் கிருமி எதிர்ப்பு சக்தி அதிகம். குளிர், சளி, தொண்டை வலி குணப் படுத்தும். உடல் சூட்டை சமநிலைப்படுத்தி சக்தி தரும்.

மற்ற பண்டைய ஊறுகாய் வகைகள்

அவுரி/மிளகாய் ஊறுகாய்: குடல் புழுக்கள், சளி குறைக்கப் பயன்பட்டது.

நெல்லிக்காய் (Amla) ஊறுகாய்: வைட்டமின் C நிறைந்ததால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தலைமுடி, தோல் ஆரோக்கியம் மேம்படும்.

கத்திரிக்காய் ஊறுகாய்: ஆயுர்வேதத்தில் சில பகுதிகளில் பயன்படுத்தப்பட்டது; இரத்த சுத்திகரிப்புக்கு உதவியது.

இதையும் படியுங்கள்:
சமையலறையில் புத்தம் புதிய யோசனைகள்!
Not only is it delicious, it's also medicine.

பண்டைய இந்தியர்கள் ஊறுகாய்களை வெறும் சுவைக்காக மட்டும் இல்லாமல் உணவின் ஓர் மருத்துவ அங்கமாகவும் எடுத்துக்கொண்டனர்.  அதனால், “அச்சாறு” என்பது சுவைக்கும், உடலுக்கும் ஒரு மருந்து என்று சொல்லலாம்.  பண்டைய இந்தியாவில் ஊறுகாய் என்பது உணவுக்குப் பக்கவிருந்தாக மட்டுமில்லாமல், ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகளின் ஒரு பகுதியாகவும் இருந்தது. ஒவ்வொரு ஊறுகாயும் தனித்தனி உடல் நலன்களை மேம்படுத்தும் வகையில் இருந்தது. அதனால்தான் இந்திய ஊறுகாய்கள் இன்றும் உலகம் முழுவதும் தனித்துவமானவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com