
மில்லட்பார் செய்யத் தேவையான பொருட்கள்:
திணை, ராகி, கம்பு, மக்காச்சோளம், சிவப்பரிசி, பொட்டுக்கடலை, கோதுமை எல்லாவற்றையும் வறுத்து பொடித்த மாவு - இரண்டு கப்
சர்க்கரை- 2 1/2 கப்
நெய்- ஒரு கப்
பால்-2கப்
தேங்காய் துருவல்- அரை கப்
நட்ஸ் ப்ளேக்ஸ்- இரண்டு கைப்பிடி அளவு.
செய்முறை:
மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் அடிகனமான பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்துவிட்டு, அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும் பொழுது ஒரு டிரேயில் கொட்டி டபராவால் சீராக்கி இளம்சூட்டில் பார்களாக போட்டு ஆறவிட்டு டப்பாக்களில் எடுத்து வைக்கவும்.
ருசிக்கு ருசி, சத்துக்கு சத்து அழகான கலர் என்று பார் அசத்தலாக இருக்கும்.
பனங்கிழங்கு பொரியல்
செய்ய தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய பனங்கிழங்கு துண்டுகள் - ஒரு கப்
பெரிய வெங்காயம் நறுக்கியது- ஒன்று
கருவேப்பிலை- ஒரு ஆர்க்கு
பச்சை மிளகாய் கீறியது -2
மஞ்சள் பொடி -ரெண்டு சிட்டிகை
தேங்காய்த் துருவல் -கைப்பிடி அளவு
முக்கால் பாகம் வேக வைத்த பயத்தம் பருப்பு -கைப்பிடி அளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கடுகு 'உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய்1 தாளிக்க தேவையான அளவு.
செய்முறை:
கனமான கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு ,உளுத்தம் பருப்பு ,கடலைப்பருப்பு, போன்றவற்றை தாளித்து சிவப்பு மிளகாய் கிள்ளி போடவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் சேர்க்கவும். அதனுடன் வேகவைத்த பனங்கிழங்கு துண்டுகளை போட்டு உப்பு சேர்த்து கிளறி, தேங்காய் பூ, வேகவைத்த பருப்பு சேர்த்துக்கிளறி இறக்கவும் . சாப்பிட அருமையாக இருக்கும்.
பனங்கிழங்கு குளிர்ச்சி பொருந்தியது. இந்தப் பொரியல் மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையது. இதில் உள்ள நார்ச்சத்தானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆதலால் பனங்கிழங்கு கிடைக்கும் பொழுது இதுபோல் வீட்டில் உள்ள அனைவரும் செய்து சாப்பிடலாம்.