வெயில் காலத்தில் உடலை குளிர்விக்கும் சோளம், தினை, குதிரைவாலி, சாமை கூழ் ரெசிபி வகைகள்!

தயிர், மோர், சின்ன வெங்காயம், மாங்காய் துண்டுகள் சேர்த்து செய்யும் சோளம், தினை, குதிரைவாலி, சாமை கூழ் வகைகள்; நீரிழிவு, உடல் எடை கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் தகவல்கள்.
millet-koozh-recipes-
millet-koozh-recipes-
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

பாரம்பரியமிக்க மற்றும் சத்து நிறைந்த கூழ் வகைகள் முக்கியமாக சோளம், சாமை, கேழ்வரகு, கம்பு, சத்துமாவு மற்றும் உளுந்து ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. உடல் சூட்டை தணிக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படும் இந்த கூழ் வகைகள் பெரும்பாலும் தயிர், மோர், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து புளிக்க வைத்து பருகப்படுகின்றன.

சோளக் கூழ்:

கூழ் செய்வதற்கு மண் பாத்திரங்களை பயன்படுத்துவது நல்லது.

சோள மாவு 

கெட்டி மோர் 

உப்பு 

சின்ன வெங்காயம் 

மாங்காய் துண்டுகள்

சோள மாவை தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். கொதிக்கும் நீரில் ஊற்றி கட்டி இல்லாமல் கிளறி நன்கு வேகவிடவும். கூழ் நன்கு வெந்து ஆறின பிறகு தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மாங்காய்த் துண்டுகள் சேர்த்து மோர் கலந்து பருக வெயிலில் ஏற்படும் உடல் சோர்வை நீக்கி உடலை குளிர்ச்சியாக வைக்கும்.

தினை கூழ்:

தினை அரிசி (அ) மாவு 1 கப் 

கெட்டி மோர் 

சின்ன வெங்காயம் 

உப்பு 

கொத்தமல்லி 

பச்சை மிளகாய்

தினையை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும் அல்லது தினை மாவைக் கூட பயன் படுத்தலாம் தண்ணீரைக் கொதிக்க வைத்து அரைத்த தினை விழுதை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறி நன்கு வேகவிடவும். ஆறியதும் தேவையான உப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் கலந்து பரிமாறவும்.

தினை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி வெப்பத்தை சமநிலைப்படுத்துகிறது. புரதம் மற்றும் நார்ச்சத்து மிகுந்த தினை வயிற்றுக்கு மிகவும் லேசானது, குளிர்சசியானது மற்றும் எளிதில் செரிமானமாகக் கூடியது.

இதையும் படியுங்கள்:
ருசிக்கு ருசி சேர்க்க 10 அதிரடி கிச்சன் ஹேக்ஸ்!
millet-koozh-recipes-

குதிரைவாலி கூழ்:

குதிரைவாலி அரிசி 50 கிராம் 

தயிர் (அ) மோர் 

சின்ன வெங்காயம் 6

உப்பு தேவையானது 

குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி போதுமான நீர் சேர்த்து நன்கு வேகவிடவும். நன்கு வெந்தவுடன் தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து பரிமாறவும். இதிலுள்ள நார்ச்சத்து நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் தடுத்து உடல் எடையைக் குறைக்க உதவும். கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் எலும்புகளை வலுப்படுத்தி இரத்த உற்பத்தியை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

சாமை கூழ்

சாமை ஒரு கப் 

சின்ன வெங்காயம் 6 

கறிவேப்பிலை சிறிது 

நெய் 1 ஸ்பூன்

கெட்டி மோர் தேவையானது

சாமை அரிசியை நன்கு கழுவி 4 கப் தண்ணீர் விட்டு குட்டி குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவிடவும். சிறிது நெய் அல்லது நல்லெண்ணெயில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். தேவையான உப்பு மற்றும் கெட்டி மோர் கலந்து பருக உடலுக்கு குளிர்ச்சியும், வெயில் காலத்தில் ஏற்படும் உடல் கொப்புளங்களைப் போக்கவும் உதவும்.

நார்ச்சத்து, புரதம் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த சாமை செரிமானத்திற்கு சிறந்தது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். 

logo
Kalki Online
kalkionline.com