
குழந்தைகளுக்கு குட்டி குட்டி இட்லியாக ஊற்றி ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம்போல சாம்பார் ஊற்றி தந்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். அதே கொஞ்சம் சத்துள்ள ஐட்டத்தையும் கலந்து தரும்போது அவர்களின் ஆரோக்கியத்துக்கும் நாம் கேரண்டியாகலாம். அப்படிப்பட்ட இரண்டு இட்லிகளின் செய்முறை இங்கு.
மினி பார்லி சாம்பார் இட்லி
தேவை:
இட்லி அரிசி - 1 கப்
பார்லி- 1/2 கப்
கருப்பு உளுந்து- 1/2 கப்
வெந்தயம்- 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சாம்பார் செய்ய
துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம்- 10
புலி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
தனியா -1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
எள்- 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கருவேப்பிலை- சிறிது
கொத்தமல்லித்தழை- 1 கைப்பிடி
எண்ணெய்- 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, வெந்தயம், பார்லியை நன்றாக அலசி நீரில் 4 மணிநேரம் ஊற வைக்கவும். கறுப்பு உளுந்தை தனியே ஊறவைத்து தோல் நீக்கி இதனுடன் சேர்த்து அரைத்து தேவையான உப்பு போட்டு கரைத்து 5 மணி நேரம் புளிக்கவேண்டும். இதில் கரண்டி போட்டு நன்கு கலந்து மினி இட்லித்தட்டுகளில் நல்லெண்ணெய்விட்டு ஊற்றி ஆவியில் வேக விட்டு ஆறியதும் எடுத்து கிண்ணங்களில் போட்டு வைக்கவும்.
சாம்பார் செய்ய பருப்பை களைந்து தேவையான நீருக்கும் மேல் சற்று கூடுதலாக நீர் விட்டு கொஞ்சம் மஞ்சள் தூள் விளக்கெண்ணெய் விட்டு மூடிவைத்து 4 விசில் வந்ததும் இறக்கி மசித்துக்கொள்ளவும்.
தனி கடாயில் எண்ணெய் இன்றி தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும் .புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் உரித்து முழுதாய் போட்டு வதக்கி புளி கரைசல் விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கடைந்த பருப்பு நீருடன் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வறுத்த பொடி சேர்த்துக்கிளறி அடுப்பை அணைக்கவும்.
மினி இட்லிகளை போட்ட கிண்ணத்தில் சாம்பார் ஊற்றி மேலே நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து ஸ்பூன் வைத்து சாப்பிடத்தரலாம்.
மினி இட்லி மஞ்சூரியன்
தேவை:
முதல் குறிப்பில் சொன்ன குட்டி மினி இட்லிகள்- 2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
குடைமிளகாய் - 1
நறுக்கிய இஞ்சி பூண்டு - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் -2/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - சிறிது
கொத்தமல்லித்தழை - பொடியாக நறுக்கியது சிறிது
எண்ணெய்- 2 ஸ்பூன்
உப்பு- சிறிது
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடானதும், அதில் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு சற்று பெரியதாக சதுரமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சற்று பெரிதாக நறுக்கிய குடைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் மிளகாய்தூள், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி தேவையான உப்பையும் சேர்த்து வதக்கவும். ஏற்கனவே இட்லியில் உப்பு இருந்தால் இதில் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது நன்றாக வதங்கியதும் சிறிதளவு சோயா சாஸ் சேர்த்து ஏற்கனவே சுட்டு வைத்திருக்கும் இட்லிகளை அதில் போட்டு நன்கு கலந்துவிட்டு சிம்மில் வைத்து நன்கு கலந்து விட்டு கொத்தமல்லி தலையை மேலே ஊற்றி மேலே தூவித்தரலாம். காரம் தேவை என்றால் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி குழந்தைகளுக்கு தரலாம் சூப்பராக இருக்கும். அத்துடன் முந்திரிப்பருப்பையும் வறுத்து சேர்க்கலாம்.