கோடை வெயிலைச் சமாளிக்க… அல்சர் முதல் சளி வரை விரட்டும் 'அதிசய ஜூஸ்' ரெசிபிகள்!


'Miracle Juice' Recipes!
'Miracle Juice' Recipes!
Published on

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியையும், செரிமானக் கோளாறுகளை சரி செய்யவும் வில்வப்பழம் சிறந்த மருந்தாகிறது. இது உடல் சூட்டைத் தணித்து வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அல்சர் போன்ற கோடை நோய்களை குணப்படுத்துகிறது. வில்வப் பழ ஜூஸ் குடிப்பது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள தையாமின் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் உடலின் குடல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவுகின்றது.

வில்வ பழ ஜூஸ்:

வில்வப்பழம் 1

பனங்கற்கண்டு (அ) தேன்-சுவைக்கேற்ப

தண்ணீர் தேவையான அளவு

பழுத்த வில்வப் பழத்தை இரண்டாக உடைத்து உள்ளே இருக்கும் சதையை ஒரு ஸ்பூன் மூலம் தனியாக எடுத்துக்கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கைகளால் பிசைந்து கரைக்கவும். விதைகளை எடுத்துவிட்டு கரைத்த விழுதை ஒரு வடிகட்டியால் வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகலாம். அல்லது மேற்கூறிய பொருட்களை சேர்த்து மிக்ஸியில் அடித்து ஜூஸாக்கியும் பருகலாம். விருப்பப்பட்டால் சிறிது ஏலக்காய்தூள் சேர்த்து பருகலாம். வில்வ ஜூஸ் குடிப்பதால் கோடையில் ஏற்படும் அடங்காத தாகம் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் நீங்கும்.

வில்வ இலை ஜூஸ்:

வில்வ இலை 1 கைப்பிடி

துளசி 10 இலைகள்

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

மிளகுத்தூள் 1/4 ஸ்பூன்

ஒரு கைப்பிடி அளவு வில்வ இலைகளை எடுத்துக்கொண்டு அத்துடன் சிறிது துளசி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
பீட்சாவே தோத்துடும்… வடசென்னை மக்களின் 100 வருட சீக்ரெட் 'அட்லாப்பம்' செய்முறை இதோ!

'Miracle Juice' Recipes!

அதில் ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு, கால் ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடித்து விட நாள்பட்ட நெஞ்சு சளி, ஆஸ்துமா, வீசிங், சைனஸ் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும். மெல்லிய கசப்பும், துவர்ப்பும் கொண்ட இந்த ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.

வில்வ பழ ஸ்மூத்தி:

வில்வ பழத்துடன் மாம்பழம் அல்லது வாழைப்பழம் என ஏதாவது ஒரு பழத்தையும் சில துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதில் இயற்கையிலேயே இனிப்பு இருக்கும் என்பதால் தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து சிறிது பால் கலந்து சாப்பிடலாம். மில்க் ஷேக் போல் வில்வ பழ ஸ்மூத்தி சாப்பிட ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
காளான் பஜ்ஜி முதல் பீட்ரூட் பஜ்ஜி வரை: 10 நிமிடத்தில் சுவையான ஸ்நாக்ஸ் ரெடி!

'Miracle Juice' Recipes!

வில்வப் பழத்தில் லேசாக துவர்ப்பு சுவை இருக்கும் என்பதால் அதை விரும்பாதவர்கள் தர்பூசணி, வாழைப்பழம், நுங்கு என ஏதாவது ஒன்றை சிறிது சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரிக்கலாம். இனிப்பு வேண்டாம் என்று நினைப்பவர்கள் வில்வப் பழத்துடன் தோல் நீக்கிய இஞ்சி சிறு துண்டு, ஐந்தாறு புதினா இலைகள் சேர்த்து, சுவைக்காக சிறிது உப்பும் சேர்த்து மிக்ஸியில் அடித்து ஜூஸாக செய்து பருகலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com