காளான் பஜ்ஜி முதல் பீட்ரூட் பஜ்ஜி வரை: 10 நிமிடத்தில் சுவையான ஸ்நாக்ஸ் ரெடி!


Delicious snacks
Delicious snacks
Published on

காப்ஸிகம் பஜ்ஜி

தேவை:

பெரிய குடமிளகாய் - 1,

கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப்,

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,

சோள மாவு - அரை டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கடலை மாவு, அரிசி மாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கி, விதை நீக்கி, பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும். சுவையான காப்ஸிகம் பஜ்ஜி தயார்.

பட்டன் காளான் பஜ்ஜி

தேவை:

பட்டன் காளான் - 15

கடலைமாவு- 1 கப்

அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி

சோளமாவு - 3 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் -1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் -1/ 4 ஸ்பூன்

சீரகம் -1 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காளானை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, சோளமாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மிளகுத்தூள், சீரகம், உப்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

பின்னர் தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்

காளானை கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக மிதமான தீயில் பொறித்து எடுக்கவும். சுவையான பட்டன் காளான் பஜ்ஜி ரெடி.

இதையும் படியுங்கள்:
புரதச்சத்து மிக்க முந்திரிகொத்து - அசத்தல் ரெசிபி!

Delicious snacks

கேரட் பஜ்ஜி

தேவை:

பெரிய கேரட் - 2,

அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு கப்,

நன்றாகப் பொடித்த

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,

இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பொட்டுக்கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகுத்தூள், இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மாவை கெட்டியாகக் கரைக்கவும். கேரட்டை வில்லைகளாக நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும். சுவையான கேரட் பஜ்ஜி தயார்.

பீட்ரூட் பஜ்ஜி

தேவை:

கடலைப்பருப்பு – முக்கால் கப்

பச்சரிசி – கால் கப்

பீட்ரூட் – 100 கிராம்

காய்ந்த மிளகாய் – 4

சீரகம் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
பீட்சாவே தோத்துடும்… வடசென்னை மக்களின் 100 வருட சீக்ரெட் 'அட்லாப்பம்' செய்முறை இதோ!

Delicious snacks

செய்முறை:

அரிசி, கடலைப்பருப்பை சுமார் மூன்று மணிநேரம் ஊறவைத்து பீட்ரூட், எண்ணெய் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும் (ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது). பிறகு பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பீட்ரூட் பஜ்ஜி ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com