
மூங்லெட் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பாசிப்பருப்பு (Moong Dal) 1 கப்
2.அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன்
3.மிளகாய் தூள் 1½ டீஸ்பூன்
4.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
5.உப்பு தேவையான அளவு
6.இஞ்சி பேஸ்ட் ½ டீஸ்பூன்
7.சீரகம் ½ டீஸ்பூன்
8.ஈனோ ½ டீஸ்பூன்
9.நறுக்கிய தக்காளி 2 டீஸ்பூன்
10.நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன்
11.நறுக்கிய காப்ஸிக்கம் 2 டீஸ்பூன்
12.நறுக்கிய பச்சை மிளகாய் 1
13.பட்டர் தேவையான அளவு
14.எண்ணெய் தேவையான அளவு
15.கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
செய்முறை: பாசிப்பருப்பை ஒருமணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் மசிய அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் ஈனோ, அரிசிமாவு, நறுக்கிய காய்கறிகள், உப்பு மற்றும் அனைத்து ஸ்பைஸஸ்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு அடைமாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு குழி கரண்டி மாவை ஆம்லெட் சைஸ்ஸுக்கு ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும். பின் திருப்பிப்போட்டு, வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து, சிறிது பட்டர் தடவி, மல்லி தழை தூவி
அலங்கரித்து பரிமாறவும். ப்ரோடீன் சத்து நிறைந்த மூங்லெட் தயார்!
வெள்ளரி தோசை
தேவையான பொருள்கள்:
1.அரிசி மாவு ½ கப்
2.தயிர் ¼ கப்
3.சின்ன வெங்காயம் 3
4.பச்சை மிளகாய் 1
5.சீரகம் ½ டீஸ்பூன்
6.தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
7.இஞ்சி சிறு துண்டு 1
8.மீடியம் சைஸ் வெள்ளரிக்காய் 1
9.உப்பு தேவையான அளவு
10. கொத்தமல்லி இலைகள் 1 டேபிள் ஸ்பூன்
11.எண்ணெய் தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவைப்போட்டு தயிரை ஊற்றவும். வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி அதனுடன் மற்ற பொருள்கள் அனைத்தையும்(எண்ணெய் தவிர) சேர்த்து மிக்ஸியில் மசிய அரைத்துக்கொள்ளவும்.
அரைத்ததை அரிசிமாவு-தயிர் கலவையுடன் சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி
மாவை ஊற்றி தோசைகளை சுட்டெடுக்கவும். தேங்காய்
சட்னி தொட்டு சூடாக சாப்பிடவும். குளிர்ச்சி தரக்கூடிய சத்தான வெள்ளரி தோசை!