
மோத்தி லட்டு (Motichoor Laddu) என்பது இந்தியாவில் பிரபலமான, சிறிய சிறிய பொட்டுகளால் ஆன அருமையான இனிப்பு. இது பெரும்பாலும் பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் விசேஷ சந்தர்ப்பங்களில் செய்யப்படும்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு மாவு அல்லது (கடலைமாவு) – 1 கப்
நீர் – ¾ கப் (பதத்திற்கு தேவையானது)
நெய் – வறுக்க
பூந்தி ஸ்லாட்டர் அல்லது ஜன்னல் கரண்டி (பூந்தி வடிவத்திற்கு)
சர்க்கரை – 1 கப்
நீர் – ½ கப்
ஏலக்காய் தூள் – ½ மேசைக்கரண்டி
குங்குமப்பூ (விருப்பப்படி)
ஆரஞ்சு/மஞ்சள் கலர் – சிறிது (மோதீச் நிறத்துக்கு)
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பாதாம், பிஸ்தா – சிறிது
ரோஸ் வாட்டர்
செய்முறை:
பாசிப்பருப்பு அல்லது கடலை மாவில் நீர் சேர்த்து இடியாப்ப மாவு போல் ஓரளவு நீர்த்த பதமாக கலக்கவும். சூடான எண்ணெயில், பூந்தி ஸ்லாட்டரால் ஊற்றிப் பொட்டாகக் கொட்டவும். நன்கு பொரிந்த பிறகு, மேல் இருக்கும் அதிக எண்ணெயை, ஒரு சல்லடையில் வடிகட்டி வைக்கவும். சர்க்கரை + நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு துளி சீர்ப் பாகு பதத்திற்கு வந்ததும், ஏலக்காய்த் தூள், கலர், ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.
தயாரான பூந்தியை பாகில் போட்டுவிட்டு நன்றாக கிளறவும். பாகை பூந்தியில் நன்கு ஊற விட்டதும், நெய் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்க்கவும். இப்பொழுது கரங்களில் நெய் தடவி, உருண்டையாக உருட்டி லட்டு வடிவம் செய்யவும். சூடாக இருந்தால் மென்மையாக இருக்கும். குளிர்ந்த பிறகு, இறுகி நல்ல ஃபர்ம் ஆகும் டின்னருக்கு பிறகு ஒரு இனிப்பு டச்!
எளிதாக விரைவில் செய்ய விருப்பமென்றால், பூந்தி மிஷின் அல்லது மைக்ரோ பூந்தி ஸ்லாட்டரால் சரியான கட்டுப்பாடு கிடைக்கும்.
கறுப்பு உளுந்து லட்டு
வெல்லம் வைத்து செய்யும் கறுப்பு உளுந்து லட்டு சத்தானதும், சுவையானதும் இயற்கையான இனிப்பும் ஆகும். கறுப்பு உளுந்து லட்டு தமிழர்களின் இனிப்பு வகை.
தேவையான பொருட்கள்:
கறுப்பு உளுந்து – 1 கப்
வெல்லம் – ¾ கப் (துருவியது)
நெய் – 2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்படி அதிகரிக்கலாம்)
ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்
தேங்காய் துருவல் _ 1/2கப் (வறுத்தது)
முந்திரி – 8-10 (வறுக்கவும்)
செய்முறை:
கறுப்பு உளுந்தை வாணலியில் போட்டு, வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும். அதை ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைக்கவும். ஒரு வாணலியில் வெல்லத்தை கொஞ்சம் தண்ணீருடன் (2-3 டேபிள்ஸ்பூன்) சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சி பாகு செய்யவும். பாகு ஒரு நூல் பதத்தில் வந்ததும் இறக்கி வடிகட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்துமாவு, ஏலக்காய்பொடி சேர்க்கவும். வெல்ல பாகுவை அதில் ஊற்றி நன்றாக கலக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும். கையில் கொஞ்சம் நெய் தடவி, சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக உருட்டவும். வெல்ல பாகு அதிகமாக பாகுபடாமல் இருக்கவேண்டும் இல்லையெனில் லட்டு காய்ந்துப்போகும். உளுந்து நன்கு வறுக்கப்பட வேண்டும், இல்லையெனில் பச்சை வாசனை இருக்கும்.
இது நெய் மிகக் குறைவாகப் பயன்படுத்தும் ஆரோக்கியமான டேஸ்டி லட்டு.