நாவில் நீர் ஊறும் முக்கனிப் பாயசம் & வெண்டைக்காய் தயிர் குழம்பு: இந்த வாரம் உங்கள் வீடே மணக்கட்டும்!

கோடைக்கால பழங்களின் இனிப்பும், மதிய உணவிற்கு உகந்த புளிப்பு குழம்பும் ஒரே பதிவில்!
சமையல் குறிப்புகள்|mukkani payasam
சமையல் குறிப்புகள்AI image
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on

நாவூறும் முக்கனிப் பாயசம் செய்யத் தேவையான சமையல் குறிப்புகள்

தேவையான பொருட்கள்:

1.வாழைப்பழம்- 2

2.தோல் சீவி நறுக்கிய மாம்பழத் துண்டுகள்- 1 கப் 

3.கொட்டை நீக்கி நறுக்கிய பலாப்பழம்- ¾ கப்

4.நாட்டுச் சர்க்கரை- தேவையான அளவு 

5.ஊற வைத்து வேகவைத்த ஜவ்வரிசி- ½ கப் 

6.நெய்- தேவையான அளவு 

7.முந்திரிப் பருப்பு- 10

8.பால்- ¾ கப் 

9.ஏலக்காய்ப் பவுடர்- ½ டீஸ்பூன்

செய்முறை:

முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்தெடுத்து வைத்துக்கொள்ளவும். வாழைப்பழங்களை மிக்ஸியில் நறுக்கிப்போட்டு அதனுடன் பலாப்பழம் மற்றும் மாம்பழத் துண்டுகளையும் சேர்த்து மசிய அரைத்துக்கொள்ளவும். பின் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடாக்கவும். அதனுடன் பழக் கூழை சேர்த்து, சிறு தீயில் நன்கு கலந்துவிடவும்.

பிறகு வேகவைத்த ஜவ்வரிசியையும் சேர்த்து கட்டியில்லாமல் நசுக்கி  ஒன்றோடொன்று சேர்ந்து வருமாறு கிளறிவிடவும். பின் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். பாயசம் ரொம்ப திக்காக இருந்தால் மேலும் கொஞ்சம் பால் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். அடிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். பின் பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கி முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய்ப் பவுடர் சேர்த்து பரிமாறவும். சூப்பர் சுவையில் ஒரு முக்கனிப் பாயசம்.

சமையல் குறிப்புகள்|vendaikai thayir kulambu
சமையல் குறிப்புகள்AI image

வெண்டைக்காய் தயிர் குழம்பை சுவையாக மாற்றும் எளிய சமையல் குறிப்புகள்

தேவையான பொருட்கள்:

1.வெண்டைக்காய்- 200 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)

2.கடுகு- ½ டீஸ்பூன் 

3.சீரகம்- ½ டீஸ்பூன்

4.உளுத்தம் பருப்பு- ½ டீஸ்பூன்

5.கடலைப் பருப்பு- ¼ டீஸ்பூன் 

6.தக்காளி- 2 (நறுக்கிக் கொள்ளவும்)

7.வெங்காயம்- 1(நறுக்கிக் கொள்ளவும்)

8.இஞ்சி- நறுக்கியது 1 டீஸ்பூன் 

9.பச்சை மிளகாய்- 1 (நறுக்கிக் கொள்ளவும்)

10.உப்பு- தேவையான அளவு 

11.மஞ்சள் தூள்- ¼ டீஸ்பூன் 

12.பெருங்காய தூள்- ¼ டீஸ்பூன் 

13.சிவப்பு மிளகாய் தூள்- தேவையான அளவு 

14.கறிவேப்பிலை- ஒரு இணுக்கு 

15.கொத்தமல்லி இலைகள்- 15

16.தயிர்- 3 டேபிள் ஸ்பூன் 

17.எண்ணெய்- தேவையான அளவு 

செய்முறை:

தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு ஹேண்ட் பிளெண்டரால் நன்கு அடித்துக்கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை போடவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து காய் சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும்.

மற்றொரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை போடவும். அவை சிவந்ததும் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
பாட்டி காலத்து கைமணம்: உடல் எடையை குறைக்கும் கொள்ளு மசியல் மற்றும் வாழைப்பூ சமையல் ரகசியம்!
சமையல் குறிப்புகள்|mukkani payasam

பின் அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காய தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு சுருள கிளறிவிடவும். பிறகு அதை அடித்து வைத்துள்ள தயிரில் சேர்த்து, வெண்டைக்காயையும் போட்டு, உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு அதன் மேற்பரப்பில் கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும். சுவையான வெண்டைக்காய்-தயிர் குழம்பு தயார்.

இந்த தனித்துவமான சமையல் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குடும்பத்தினருக்கு வழக்கமான உணவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, நறுமணமிக்க மற்றும் நாவூறும் மதிய உணவு விருந்தை நீங்கள் மிகக் குறுகிய காலத்தில் வழங்கி அசத்த முடியும்.

logo
Kalki Online
kalkionline.com