
கேரட் முறுக்கு
தேவை:
கேரட் - 6
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கேரட்டை தோல் சீவி, நறுக்கி மிக்ஸியில் அரைத்து, சாறு பிழியவும். கடலை மாவு, அரிசி மாவு, எலுமிச்சைச்சாறு, கேரட் சாறு, உப்பு, மிளகு சீரகத்தூள் கலந்து மாவை கெட்டியாக பிசையவும். முள்ளு முறுக்கு அச்சில் மாவை நிரப்பி காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், பல சுவைகள், அழகான நிறம் கொண்ட கேரட் முறுக்கு தயார்.
முப்பருப்பு முறுக்கு
தேவை:
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா அரை கப்
உளுந்தம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
பச்சரிசி - 1 கப்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசி, பாசிப்பருப்பை நீரில் ஊறவைத்து, நீரை வடித்துவிட்டு, நிழலில் உலர்த்தி, வாணலியில் வறுக்கவும். கடலைப் பருப்பையும், உளுந்தம் பருப்பையும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்து மாவாக அரைக்கவும். இந்த மாவுடன் உப்பு, எள், வெண்ணெய், பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல் கலந்து, சிறிது சிறிதாக நீர் விட்டு கெட்டியாக பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முறுக்கு அச்சில் உட்புறம் சிறிது எண்ணெய் தடவி, இந்த மாவை நிரப்பி காய்ந்த எண்ணெயில் பிழிந்து, பொரித்து எடுத்தால், சுவையான, சத்தான முப்பருப்பு முறுக்கு தயார்.
மகிழம்பூ முறுக்கு
தேவை:
புழுங்கல் அரிசி - 2 கப் பொட்டுக்கடலை - அரை கப்
சீரகம் - அரை ஸ்பூன் எண்ணெய் - தேவைக்கேற்ப வெண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
புழுங்கல் அரிசியை களைந்து ஊறவைத்து, நீரை வடித்து, உப்பு சேர்த்து நைசாக கெட்டியாக அரைக்கவும். பொட்டுக்கடலையை பொடித்து அரைத்த மாவுடன் கலக்கவும். வெண்ணையை கையில் தொட்டு தொட்டு பிசையவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து மகிழம்பூ முறுக்கு நாழியில் மாவை நிரப்பி பிழியவும். வெந்ததும் எடுக்கவும். சுவையாகவும், மொறு மொறுப்புடனும் இருக்கும் இந்த முறுக்கு.
வரகரிசி முறுக்கு
தேவை;
வரகரிசி - 1 கப்
உளுந்தம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வரகரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் வாணலியில் வறுத்து மாவாக பொடிக்கவும். அதனுடன் மிளகு சீரகத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு, வெண்ணெய் தொட்டுக்கொண்டு கெட்டியாகப் பிசையவும். முறுக்கு அச்சில் இந்த மாவை நிரப்பி, காய்ந்த எண்ணெய்யில் பிழிந்து, பொரித்து எடுக்கவும். சுவையான, சத்தான வரகரிசி முறுக்கு தயார்.