அல்டிமேட் சுவையில் உளுத்தம் பருப்பு ஸ்வீட் கட்லெட்: ஒருமுறை செய்து பாருங்களேன்!

cutlet-recipes-tamil
cutlet-recipes-tamil
Updated on

உளுத்தம்பருப்பு ஸ்வீட் கட்லெட்

தேவை:

உளுத்தம்பருப்பு - 1/2 கப்

நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்

நெய் - 1/4 கப்

ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை:

உளுத்தப்பருப்பை, வெறும் வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு, கொரகொரப்பாக அரைக்கவும்.

சர்க்கரை, ஏலக்காய் இரண்டையும் பொடி செய்யவும். அரைத்த உளுத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் கலந்துகொள்ளவும்.அந்த மாவை, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் விருப்பமான வடிவத்தில் கட்லெட் போல தட்டி வைத்துக் கொள்ளுங்கள் அடுப்பை 'ஸிம்'மில் வைத்து, தோசைக்கல்லை காயவைத்து, தட்டிய கட்லெட்டுகளை போட்டு, சுற்றிலும் நெய்விட்டு, லேசாகப் பொரிந்ததும் உடனே எடுத்துவிட வேண்டும். பொரித்தெடுத்த கட்லெட் மீது விருப்பப்பட்டால் துருவிய முந்திரி, பாதாம், பிஸ்தா தூவி சுடச்சுட பரிமாறலாம். அல்டிமேட் சுவையில் உளுத்தம் பருப்பு ஸ்வீட் கட்லெட் ரெடி.

கொள்ளு கட்லெட்

தேவை:

கொள்ளுப்பயிறு - ஒரு கப்,

முட்டைக்கோஸ்,

வெங்காயம், கேரட், குடைமிளகாய் நறுக்கியது - தலா அரை கப்,

கரம் மசாலா - அரை டீஸ்பூன்,

நறுக்கிய பச்சை மிளகாய் - 2,

மஞ்சள் தூள் - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு,

சோம்புப்பொடி - ஒரு டீஸ்பூன்.

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு .

செய்முறை:

கொள்ளுப் பயிறை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து வைக்கவும். அந்தக் கலவையுடன் நறுக்கிய காய்கறிகள் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி, கரம் மசாலா, உப்பு, சோம்புப்பொடி சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். கடாயில் எண்ணையை காயவைத்து நமக்கு விருப்பம் உள்ள வடிவில் தட்டி எண்ணையில் போட்டு பொரித்தெடுத்தால் கொள்ளு கட்லெட் ரெடி.

இதையும் படியுங்கள்:
வெறும் பழமல்ல, இது 'அருமருந்து'! - பேரீச்சம்பழத்தில் ஒளிந்திருக்கும் அளப்பரிய சக்திகள்!
cutlet-recipes-tamil

நவதானிய கட்லெட்

தேவை:

ஊறவைத்து முளைவிட்ட நவதானியக் கலவை – ஒரு கப்

வேகவைத்த வேர்க்கடலை – 50 கிராம்

வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப்

பச்சை மிளகாய் – 2

பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள், மல்லித்தூள் – தலா ஒரு டீஸ்பூன்

சோள மாவு – ஒரு டீஸ்பூன் (கரைசலாக்கி வைக்கவும்)

பிரெட் கிரம்ஸ் – கால் கப் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு

சோம்பு – கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் சோம்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி, நவதானியக் கலவையைச் சேர்த்து பாதி வேகும் வரை நன்கு வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து வதக்கி, கொத்தமல்லித்தழை, புதினா தூவி இறக்கவும்.

இந்தக் கலவை ஆறியதும் வேண்டிய வடிவில் கட்லெட்டுகளாகச் செய்யவும். இவற்றை சோளமாவு கரைசலில் தோய்த்து எடுத்து, பிரெட் கிரம்ஸில் புரட்டி, தவாவில் கொஞ்சம் எண்ணெய்விட்டு, கட்லெட்டுகளை வைத்து இருபுறமும் சுட்டு எடுக்கவும். சுவையான, சத்தான நவதானிய கட்லெட் ரெடி.

கார்ன் கட்லெட்

தேவை:

மக்காச்சோளம் – 3 (வேக வைத்தது உதிர்க்கவும்), பிரெட் ஸ்லைஸ் – 3,

பால் – சிறிதளவு,

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்),

பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,

உப்பு, ரஸ்க்தூள், எண்ணெய் – தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
இளநீர் வாங்கும்போது இதெல்லாம் கவனிக்காம வாங்காதீங்க!
cutlet-recipes-tamil

செய்முறை:

உதிர்த்த சோள முத்துக்களை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பிரெட் துண்டுகளை ஒரு நிமிடம் பாலில் நனைத்து, அரைத்து வைத்துள்ள சோள விழுதில் சேர்த்து நன்கு பிசையவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக்கவும். அவற்றை ரஸ்க் தூளில் புரட்டி, லேசாக தட்டி… தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். சுவையான கார்ன் கட்லெட் தயார்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com