Navratri festival and recipes
Navrathiri recipes

நவராத்திரி விரதத்தை ருசியாக மாற்றும் ரெசிபிஸ் 2 !

Published on

நவராத்திரி (Navrathiri) திருவிழா பராசக்தியின் ஒன்பது அவதாரங்களின் வழிபாட்டை மற்றும் தீமைக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் விழாவாகும். வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் மக்கள் நவராத்திரி (Navrathiri) ஒன்பது நாட்களும் விரதமிருந்து ஆழ்ந்த பக்தி மற்றும் ஒழுக்கத்தைக் கடைபிடித்து தேவியை வணங்குவர். பக்தர்கள் விரத நாட்களில் குறிப்பிட்ட சில தானிய வகைகளில் செய்த உணவுகள், காய்கறிகள், பழங்களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள்,

பாரம்பரிய வட இந்திய நவராத்திரி (Navrathiri) விரத உணவில் பெரும்பாலும் குட்டு (பக்வீட்), சிங்காரா, மக்கானா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களால் செய்யப்பட்ட உணவுகள் இடம் பெறும். சாபுதானா கிச்சடி, குட்டு ரொட்டி, சிங்காரா ஆட்டா பூரி, ராஜ்கிரா பராத்தா, தயிர், பழ சாலட், பக்வீட் கீர், பழங்கள் மற்றும் உலர் பழங்கள் போன்றவற்றை விரத உணவாக எடுத்துக் கொள்வர். விரத நாட்களில் அவை நல்ல போஷாக்கையும் அளிக்கும். அவற்றில் சிலவற்றின் செய்முறையைப் பார்ப்போம்

1. விரத சாபுதானா கிச்சடி:

தேவையான பொருள்கள்:

ஜவ்வரிசி - 1கப் (குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து, மாவு போக நன்கு கழுவி தயார் செய்து வைக்கவும்)

உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்தது)

சீரகம் - 1 ஸ்பூன்

இஞ்சி,பச்சைமிளகாய் - சிறிது (துருவியது)

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

நெய் - சிறிது

கல் உப்பு (Sendha Namak) - தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
நவராத்திரி சுண்டல்: சமையல் குறிப்புகளும், சுண்டல் டிப்ஸ்களும்!!
Navratri festival and recipes

ஒரு கடாயில் சிறிது நெய்யை சூடாக்கவும். பின்னர் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். இப்போது ஊறவைத்த ஜவ்வரிசி, வேக வைத்து உதிர்த்த உருளைக்கிழங்கு , பச்சை மிளகாய், கொத்தமல்லி, சுவைக்கேற்ப கல் உப்பு பொடி, கருப்பு மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். வறுத்துப் பொடித்த வேர்க்கடலையை கடைசியாக சேர்த்துக் கிளறி சிறிது நேரம் வதக்கி எடுத்தால் சாபுதானா கிச்சடி ரெடி.

2. பூல் மக்கானா (Phool Makhana) கீர்:

தேவையான பொருள்கள்:

மக்கானா - 1 கப் (தாமரை விதை)

பால் - 1 ½ கப்

சர்க்கரை - ¼ கப்

ஏலக்காய் பொடி - சிறிது

உலர் பழங்கள், குங்கமப்பூ - சிறிது

இதையும் படியுங்கள்:
நவராத்திரி சிறப்பு: இந்த கோயில்களுக்கு சென்றால் நினைத்தது நடக்கும்!
Navratri festival and recipes

கீர் செய்ய முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் மக்கானாவைச் சேர்க்கவும். குறைந்த தீயில் 7 நிமிடங்கள் வேக வைக்கவும். அவ்வப்போது கிளறவும்.

கீர் சிறிது வெந்ததும் நறுக்கிய உலர்ந்த பழங்கள், ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ பால் ஆகியவற்றை சுவைக்கேற்ப சேர்த்துக் கலக்கவும்.

இப்போது கீரை கிளறிக் கொண்டே குறைந்த தீயில் வேக வைக்கவும். கீர் கெட்டியாகத் தொடங்கி, மக்கானா நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் சமைக்கவும். சுவையான மக்கானா கீர் செம டேஸ்டாக இருக்கும். நல்ல போஷாக்கையும் அளிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com