நோ ஓவன்! நோ முட்டை! - ஸ்பெஷல் மேங்கோ ரவா கேக்!

கேக்...
கேக்...Image credit -cookclickndevour.com
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on

மாம்பழத்தை வைத்து  எந்த ஐட்டம் செய்தாலும் அது சூப்பரான டேஸ்ட்டாக இருக்கும். இது ஒரு ஸ்பெஷல் கேக்.  ஓவன் தேவையில்லை. முட்டை கிடையாது.

 தேவை:

* நல்ல மாம்பழம்  -  1

 * ரவை (சுத்தம் செய்தது) - 1 கப்

 * ஜீனி    - அரை கப்

 * கெட்டி தயிர் -  முக்கால் கப்

 * எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

 * நல்ல பால் - அரை கப்

 * கோதுமை மாவு  -  முக்கால் கப்

 * பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

 *பொடி செய்த ட்ரை ஃப்ரூட்ஸ் 1 கப்

 * டூட்டி ஃப்ரூட்டி   - அரை கப்

செய்முறை:-

முதலில் மேங்கோவைத் தோல் சீவி,  கட் செய்து, அதை மிக்ஸியில் போட்டு அத்துடன் ரவை, ஜீனி, எண்ணெய், தயிர், கால் கப் பால் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் கொட்டி, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். 

பின்னர் டூட்டீ ஃப்ரூட்டியை கொஞ்சம் ஒரு வாயகன்ற பௌலில் போட்டு, அத்துடன்  கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், கால் கப் பால் சேர்த்து மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளவும்.

அரைத்து வைத்திருக்கும் மேங்கோவுடன்,  மேலே கூறியவைகளை கலக்கவும். இக்கலவையில், சிறிது பால் விட்டு மிக்ஸ் செய்யவும்.

இதையும் படியுங்கள்:
சாலை விதிகள் நமது உயிர்க்கவசம்! கடைபிடிப்போம், உயிர் காப்போம்!
கேக்...

பெரிய உயரமுடைய மோல்டில், சற்றே நெய் தடவிய க்ரீஸ் பேப்பரை பரத்தவும். இதில் மேங்கோ- கோதுமைக் கலவையை கொஞ்சம் விட்டு,  பொடித்த ஃட்ரை ஃப்ரூட்ஸ்களைப் பரவலாகத் தூவி மீதிக் கலவையைக் கொட்டி சமன் செய்யவும். 

இதன் மீது  பாக்கியிருக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ்களை மீண்டும் தூவவும்.

சுமார் 5 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்த PAN ற்குள் மோல்டை வைத்து, மூடவும். Gas ஐ மீடியமாக எரியவிட்டு,  40-45 நிமிடங்கள் சென்று வெளியே எடுத்து திறக்கவும். பின்னர் கட் செய்து சாப்பிடுகையில், சூப்பரான டேஸ்ட்டாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com