நான்ஸ்டிக் பாத்திரங்கள் - உயிருக்கு ஆபத்தா?

Nonstick
NonstickImg credit: freepik
Published on

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட சமையலுக்கு நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். நான்ஸ்டிக் என்றால் ஒட்டாத என்று பொருள்படும். கடாயில் ஒட்டக்கூடிய மென்மையான உணவுகளை ஒட்டாமல் சமைக்கவும், எளிதாக சுத்தம் செய்யவும், அதே சமயத்தில் உணவுகளை சமைப்பதற்கு குறைந்த அளவு எண்ணெய் மட்டுமே உபயோகப்படுத்தவும் முடிவதால், இது சமையல் செய்பவர்களின் சாய்ஸ்களில் ஒன்றாக உள்ளது.

பொதுவாக டெஃப்ளான் என அழைக்கப்படும் பாலி டெட்ரா ஃப்ளூரோ எத்திலீன் (PTFE) என்ற பொருளால் பூசப்பட்டிருக்கும் பாத்திரங்களே இந்த நான்ஸ்டிக். இதில், டெஃப்ளான் என்பது கார்பன் மற்றும் புளோரின் அணுக்களால் ஆன ஒரு செயற்கை இரசாயனமாகும். இது கிட்டத்தட்ட உராய்வு இல்லாத மேற்பரப்பை வழங்கக் கூடிய தன்மை கொண்டது. ஆனால், சில ஆதாரங்கள் அவை தீங்கு விளைவிப்பதாகவும் புற்றுநோய் போன்ற சுகாதார நிலைமைகளுடன் தொடர்புடையவை என்றும் கூறுகின்றன. ஒரு சில ஆதாரங்கள் நான்ஸ்டிக் குக்வேர் மூலம் சமைப்பது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் வலியுறுத்துகின்றன. இவ்விரண்டு கருத்துக்களிடையே நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைப்பது பாதுகாப்பானதா இல்லையா என்ற சந்தேகம் எழுவது நியாயம் தானே!

இதையும் படியுங்கள்:
இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை சப்பாத்தி செய்முறை! 
Nonstick

260 டிகிரி செல்ஸியஸ்க்கு அதிகமாக வெப்பநிலையில் நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்காமல் இருக்கும் வரை பாதுகாப்பானதே. ஏனெனில், இதற்கு மேல் இருக்கும் வெப்பநிலையில், டெஃப்ளான் பூச்சுகள் உடைந்து, நச்சுப் புகைகளை காற்றில் வெளியிடுகின்றன. இந்த புகைகளை உள்ளிழுக்கும்போது அவை பாலிமர் ஃபியூம் காய்ச்சல் எனும் டெஃப்ளான் காய்ச்சலுக்கும் நுரையீரல் பாதிப்பிற்கும் வழிவகுக்கிறது.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்:

  • வெற்று பாத்திரத்தை முன்கூட்டியே சூடாக்க வேண்டாம்.

  • அதிக வெப்பத்தில் சமைப்பதை தவிர்க்கலாம். நடுத்தர அல்லது குறைந்த வெப்பத்தில் சமைக்கலாம்.

  • வேகவைத்து சேமிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால் அந்த வகை உணவுகளை சமைப்பதற்கு நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

  • உங்கள் சமையலறையை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  • நான்ஸ்டிக் பாத்திரங்கள் கீறல்கள், பூச்சுகள் உரிதல் என்று மோசமடையத் தொடங்கும் போது, ​​அவற்றை உடனடியாக மாற்றுதல் நல்லது.

  • துருப்பிடிக்காத எஃகு (Stainless steel), வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்கள். செராமிக் சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

வீட்டு சமையல்காரர்களுக்கு நான்-ஸ்டிக் பான்கள் ஒரு வசதியான தீர்வாகத் தோன்றலாம். ஆனால், அவற்றால் ஏற்படும் உடல்நல அபாயங்களை புறக்கணிக்க முடியாது. எனவே, எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வது அவசியமாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com